பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

{{rh|௨௭௦||ஒப்பியன் மொழி நூல்

உத்தரம் தக்கணம் என்னும் தென் சொற்களே, உத்தர தக்ஷிண என்று வடமொழியில் வழங்குகின்றன என்பது தேற்றம்:

குடம்: குடம் = வளைவு. குடம் குடக்கு. அக்கு ஓர் ஈறு.

சூரியன் மேற்கேபோய் வளைவதனால், அத்திசை குடம் எனப்பட்டது. குடமலை, குடநாடு, குடவர், குடக்கோ என்பவை செந்தமிழ் வழக்குகளாதல் காண்க.

குணம் : குடம்—குணம், ட—ண, போலி. ஓ. நோ. படம்—பணம், கோடு—கோணு. குடக்கு—குணக்கு.

குனம் = வளைவு. தனக்கெடுத்தல் என்னும் வழக்கை நோக்குக, சூரியன் கீழ்த்திசையிலும் வளைதல் காண்க. ஒரே வடிவம் இரு திசைக்கும் வழங்கின் மயங்கற்கிடமாதலின், குடம் என்பது மேற்றிசைக்கும் குணம் என்பது கீழ்த்திசைக்கும் வரையறுக்கப்பட்டன.

எண்ணுப்பெயர் :

எ உயரச் சுட்டு: எ—எண்: எண்ணுதலால் தொகை மேன் மேலுயர்தல் காண்க.

ஒன்று : ஒல்—ஓ. ஒல்லுதல் பொருந்தல், ஒத்தல் பொருந்தல். ஒல்+து = ஒன்று = பொருந்தினது, ஒன்றானது.

இரண்டு + (இரள்) +து = இரண்டு.

இதற்கு இருவகையாய்க் காரணங் கூறலாம்.

(1) ஈர்தல் அறுத்தல், இரு துண்டாக ஈர்ப்பது, இரண்டு .

ஈருள் = ஈர்தல், ஈருள்—(இருள்)—(இரள்).

(2) இருமை = கருமை, இருள்.

இரா, இருள், இருட்டு, இரும்பு, இருந்தை , இறடி முதலிய சொற்களிலெல்வாம், இர் என்னும் வேர் கருமை குறித்தல் காண்க. இர்—எர்-என்—ஏன். கா : எருமை, ஏனம்