பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

௨௭௬

ஒப்பியன் மொழிநூல்

தொழிற்பெயர் வடிவங்கள் பின்வரும் முறையில் தோன்றியவை.

(1) முதனிலைத் தொழிற்பெயர்:

கா : அடி, வெட்டு.

(2) முதனிலை திரிந்த தொழிற்பெயர்,

கா : ஊண், பாடு, (கோட்படு) — கோட்பாடு,

(3) ஈற்று வலியிரட்டித்த தொழிற்பெயர்.

கா : எழுத்து, பாட்டு, மாற்று.

(4) இடைமெலிவலித்த தொழிற்பெயர்:

கா : விளக்கு, பொருத்து:

இந்நான்கு முறையும் அசையழுத்தம் பற்றியவை:

ஈற்று வலியிரட்டித்தலே, பிற்காலத்தில் மெலிதோன்றிய வடிவத்திற்கும் கொள்ளப்பட்டதாகவும் கொள்ளலாம்.

கா: இலகு — இலக்கு. இலகு — இலங்கு: இலங்கு — இலக்கு.

(5) ஈறுபெற்ற தொழிற்பெயர்:

ஈறுகளெல்லாம் பற்பல சொற்களின் திரிபே; அவை பின் வருமாறு அறுவகைப்படும்.

(i) கைப்பெயர் : கை செய்கை. கா : நடக்கை.

பாணி = கை: கா : சிரிப்பாணி (தென்னாட்டு வழக்கு).

(ii) இடப்பெயர் :

இடம்+ அடம்+ அணம்—அனம்+ அனை+ஆனை.

கா : கட்டிடம், கட்டடம், கட்டணம். விளம்பனம், வஞ்சனை, வாரானை,

இடம் - இதம்+ தம்+சம், கா : தப்பிதம், கணிதம்; கணிசம்,