பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழிலக்கணத் தோற்றம்

௨௭௫

அரைத்தவளை, சிற்றாமணக்கு, கதலிவாழை, இட்டிகை முதலியன

(3) பின்னொட்டுச் சேர்பு: தூண்டில், முற்றில்— மூச்சில், கெண்டைக்கசனி, அயிரைப் பொடி முதலியன.

(4) வலித்தல் திரிபு : (நந்து) —- நத்தை :

(5) சொன்முறைமாற்று : (கால்வாய்)—வாய்க்கால்:

பருமைப் பெயர் - Augmentatives.

(1) தனிச்சொல் ;

கடல், கடகம், கடப்பான், கடா, சேடன், சேடா, சாவி தாழி, நெடில், படாகை —-பதாகை, பூதம், மிடா, முரடு, முருடு முதலியன,

(3) முன்னொட்டுச் சேர்பு :

ஆனைக்குவளை, பாம்புமுள், பேரிந்து, பொத்த மிளகாய், மொந்தன் வாழை, மோட்டெருமை, சுட்டெறும்பு: கடப்பாரை, அல்லது கட்டிப்பாரை, மாட்டுப்பல், கடகால், பரவைச்சட்டி, பெருநாரை முதலியன,

(3) பின்னொட்டுச் சேர்பு :

குன்றம், பொட்டல் முதலியன.

தொழிற்பெயர்–Gerundial and Abstract Nouns.

தொழிற்பெயரும் பண்புப்பெயரும் மிக நெருங்கியவை. இதனால் ஆங்கிலத்தில் அவை ஓரினமாகக் கூறப்படுகின்றன; கோபித்தல் என்னும் வடிவம் தொழிலையும் கோபம் என்னும் வடிவங் குணத்தையும் குறித்தலையும், மை து அம் முதலிய ஈறுகள் இவ்விருகைப் பெயர்க்கும் பொதுவாயிருத்தலையும் நோக்குக, தன்மை, அறிவு, ஆற்றலென முத்திறப்பட்ட குணத்தின் வெளிப்பாடு அல்லது நுகர்ச்சியே தொழிலேன்க: பண்பு, இயல்பு என்னும் பெயர்களும் முதலாவது தொழிற் பெயராக விருந்தவையே. பண்+பு = பண்பு (செயல்). இயல்+பு=இயல்பு (நடக்கை ),