பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உஎ௪

ஒப்பியன் மொழி நூல்

இலக்கம் என்பது பேரெண், என்னும் கருத்தில் நூறாயிரத்தைக் குறிக்கும், எடை தூக்கு நிறை என்னும் எடுத்தலளவைப் பொதுப்பெயர்களே ஒவ்வோர் அளவைக் குறித்தல்போல,

கோடி : கோடி = கடைசி, கடைகோடி, தெருக்கோடி என்னும் வழக்குகளைக் காண்க.

கடையெண் என்னுங் கருத்தில். கோடியென்னும் பெயர் நூறிலக்கத்தைக் குறிக்கும்.

இலக்கம் கோடி என்னும் எண்ணுப் பெயர்கள் மிகப் பித்தியவை. தமிழர் கணிதத்தில் சிறந்தவராயிருந்ததினாலும், மேனாடுகளில் இலக்கத்திற்கு வழங்கும் பெயரின் வடிவம் (lakh) தமிழ்ப்பெயர் வடிவத்தை ஒத்திருப்பதாலும், இலக்கத் தீவுகள் (Laccadive Is.) என்னும் பெயர் ஆங்கிலத்திலும் திரியாது வழங்குவதாலும், இலக்கம் கோடி என்னும் பெயர்கட்குத் தமிழிற் பொருத்தமான பொருளுண்மையாலும், “மதியாதார் தலைவாசல்....... மிதியாமை கோடி பெறும்”. ‘கோடியுந் தேடிக் கொடிமரமும் நட்டி’, 'காணியாசை கோடி கேடு' என்று பழைமையான வழக்குகளுண்மையாலும், இலக்கம் கோடி என்னுஞ் சொற்களை வடசொற்கள் என்பதினும் தென் சொற்கள் என்பதே பொருத்தமுடைத்தென்க.

குறுமைப் பெயர்-Diminutives.

(1) தனிப்பெயர் :

குள் - குள்ளன், குழவு, குழவி, குண்டு, குட்டி, குட்டன், குட்டான், குட்டம், குட்டை, குணில், குந்தாணி, குருளை, குருவி, குறள், குறளி. குறில், குற்றி -குச்சி குச்சு, குஞ்சி (குஞ்சு) குக்கல், குன்று, குன்றி, குன்னி, கூழி, கூழை. சில்-- சில்லான், சிறுக்கன், சிடுக்கான், சிடுக்கான்-கிச்சான், சிண்டு, சிட்டி, சிட்டு, ஓட்டு, சின்னம், சின்னான், சீனி, சுள்-சுள்ளி, சுருவம் சுருவை, சுருங்கை, சுண்டு, சுக்கு, சுக்கல், சுப்பி. இங்கனமே பிறவும்:

(2) முன்னொட்டுச் சேர்பு :

கண் விறகு, சுண்டெலி, சீனிமிளகாய், ஊசிமிளகாய், குறுமகன் (குறுமான்). குறுதொய், குக்கிராமம் (இருபிறப்பி), குற்றில்-குச்சில், பூஞ்சிட்டு, சில்லுக்கருப்புக்கட்டி, பிட்டுக்கருப்புக்கட்டி, கூழைவால், நரிக்கெளிறு. அரிசிப்பல், அரி நெல்லி, மணிக்குடல், கட்டைமண், குட்டிச்சுவர், பூச்சிமுள்,