பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழிலக்கணத் தோற்றம்

௨௭௩

குழந்தைக்குப் பத்துப்பல்லேயிருப்பதாக பெர்ச் (Birch) கூறு கிறார்[1] பல் — பன்—பான், கா : பன்னிரண்டு. இருபான்,

முதன் முதலாய்ப் பத்து மட்டுமே எண்ணப்பட்டதினால் தான், அதற்கு மேற்பட்ட எண்களெல்லாம் பத்துப்பத்தாக என்ணப்பட்டு, பத்தாம் பெருக்க இடங்கட்கெல்லாம் கோடி வரை தனிப்பெயர்கள் இடப்பட்டுள்ளன:

முதலாவது, நூறு பத்துப்பத்தெனப்பட்டது: பதிற்றுப் பத்து என்னும் பெயர் இன்றும் நூல் வழக்கில் உள்ளமை காண்க, நூற்றுக்கு மேலெண்னும் போது, பத்துப் பதினொன்று என்று கூறின் அது 110 என்ற எண்ணையுங் குறிக்கும். ஆகையால் நூறு என்றொரு பெயர் வேண்டியதாயிற்று: இங்ஙனமே,ஆயிரத்தைப் பத்து நூறென்று கூறினும் நூற்பத்தென்று கூறினும் இடர்ப்பாடுண்டானமையின், அதற்கும் வேறு பெயர் வேண்டியதாயிற்று. இங்ஙனமே பிறவும்:

நாகர் கால் விரலையுஞ் சேர்த்து என்ணினமையின், இருபதிருபதாய் எண்ணினதாகத் தெரிகின்றது:

வகரம் தகரத்தொடு புணரின் ஆய்தமாகத் திரிவது,

"தகரம் வருவழி ஆய்தம் நிலையலும்
புகரின் றென்மனார் புலமை யோரே" (புள்ளி . 74)

என்று தொல்காப்பியத்திற் கூறப்பட்டுள்ளது.

அஃது பஃது என்று தகரம் றகரமாகத் திரியாத வடிவம் முந்திடாகவும், அஃறிஎன பஃறொடை என்று தகரம் றகரமாகத் திரித்த வடிவம் பிந்தியதாகவும் தெரிகின்றது: நூறு : நூறு = பொடி, பொடி எண்ண முடியாதபடி, மிக் கிருத்தலில், அஃது ஒரு பேரெண்ணுக்குப் பெயராயிற்று.

ஆயிரம் : அயிர் — அயிரம் — ஆயிரம்;

அயிர் = நுண் மணல்; நூறு என்பதற்குக் கூறியதே ஆயிரம் என்பதற்கும்

இலக்கம் : இலக்கம் = எழுத்து, எண்குறி, எண்;


  1. 1.Management to Children. in India. p. 79...