பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

முன்னுரை

ரென்று சொல்லப்படுகின்றது. அஃது உண்மையாயிருப்பினும் சிறுபான்மைக் கலப்பையே குறிக்கும். சில இந்தியர் மேனாட்டு மாதரை மணந்திருக்கின்றனர். இதனால் மேனாட்டாரும் கீழ்நாட் டாரும் கலந்துவிட்டனர் எனக் கூற முடியாது, மலையாள நாட்டில் பார்ப்பனர் திராவிடரான நாயமாதருடன் சம்பந்தம் என்னும் தொடர்பு வைத்துக் கொள்கின்றனர். ஆயினும், அம் மாதரையோ, அவருக்குப் பிறக்கும் பிள்ளைகளையோ, அக்கிராகரத்திற் சேர்த்துக்கொள்வதில்லை. அவரும் தம் இனத்தார் அல்லது குலத்தாருடனேயே இருந்து வருகின்றனர். திருவள்ளுவரின் தந்தையாகச் சொல்லப்படும் பகவன் என்னும் பார்ப்பான், ஆதி என்னும் பறைச்சியோடு கூடி இல்லறம் நடத்தினதாக ஒரு கதை வழங்கி வருகின்றது. அதிலும், பகவன் ஆதியைக் கைவிட்டோடியதும், பின்பு பலநாட் கழித்து, ஆதி பகவனைக் கண்டு, அவன் என்செயினும் விடாது தொடர்ந்து, தன்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு வற்புறுத்தியதும், அதன்பின், அவன் தப்ப வழியின்றித் தனக்கவளிடம் பிறக்கும் பிள்ளைகளை உடனுடன் நீக்கிவிட வேண்டுமென்னும் நிபந்தனையின்மேல், அதற்கு வெறுப்புடன் இசைந்ததும் அறியப்படும்.

பார்ப்பனர் இதுவரை தங்களை எல்லா வகையிலும் பிரித்தே வந்திருக்கின்றனர். இன்றும் அங்ஙனமே. ஆயினும், தற்கால அரசியல் முறைபற்றி, ஆரியர் - திராவிடர் என்பது மித்தையென்றும் “இருவரும் ஒருவர்” என்றும் கூறிக் கொள்கின்றனர். இது சொல்லளவேயன்றிச் செயலளவிலன்று.

ஆரிய திராவிட நாகரிக வேறுபாடு

இக்கால மொழியியலும் அரசியலும்பற்றித் தமிழும் அதனினின்று திரிந்த திரவிடமும் வேறு பிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் திரவிடம் என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே.

தமிழ் — தமிழம் — த்ரமிள — திரமிட — திரவிட — த்ராவிட —திராவிடம்.

(1) வரணம் : பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் ஆரிய வரணப்பாகுபாடும், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் தமிழ வரணப்பாகு பாடும் ஒன்றேயென்று மேனோக்காய்ப் பார்ப்பாருக்குத் தோன்றும்; ஆனால், அவை பெரிதும் வேறுபாடுடையன.