பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

요의 ஒப்பியன் மொழிநூல், உநூறு, மரு உ முதலிய வடிவங்களை நோக்கின், பண்டு சில வினைப்பகுதிகள் ஈற்றுயிர்க்குறில் நீண்டும் தொழிற் பெயரானது போல் தெரிகின்றது. இதுவும் அசையழுத்தம். சென்று, கண்டு, ஓடி, போய் என்னும் வடிவங்களை, குன்று. வண்டு, வெகுனி, பாய் என்னும் தொழிற்பெயர் சுளுடன் ஒப்பு நோக்குக. பின்னவற்றுள் வெகுளியொழிந் தவை தொழிலாகு பெயர்கள், இ-ய். கா : போகி-போய், தாலி-தாய். பிற்காலத்தில் ஐம்பாற் கட்டுப்பெயர்களான பாலீறுகள் இறந்த கால வினைகளுடன் சேர்க்கப்பட்டன. கா: செய்து + ஆன் = செய்தான் = செய்கையையுடை யவன். சினந்தான் =சினந்த செயலோன், இறந்தகால வீனைகள் பாலீறு பெற்றுச் சிறிது காலஞ் சென்ற பின், எதிர்கால வினைமுற்றுக்களும் பா லீறு பெற்றன. கா - செய்யுமான்--செய்ம் மான்- செய்வான். செய்யுமாள் - செய்ம்மாள்--செய்வாள். செய்யு மார்-- செய்ம்மார்- செய்வார். செய்யுமது - செய்ம்மது - செய்வது. செய்யும் செய்ம்ம , செய்வ, செய்யுமன --செய்ம்மன- செய்வன, உண்ணுமான்-உண்மான்- உண்பான். நடக்குமான் - நடப்பான், இனி, செய்வு நடப்பு என உவ்வீறும் புவ்வீறும் பெற்ற தொழிற்பெயர்களே பாலீறு பெற்று எதிர்கால வினைமுற்றாகும் என்று கொள்ளவும் இடமுண்டு. செய்பு+ ஆன் = செய்வான், தடப்பு+ஆன் - நடப்பான். "ஆ ஓ வாகும் பெயருமா ருளவே (தொ . 679) என்றபடி, செய்யுமார் என்பது செய்யுளில் வினையா எணையும் பெயராகும்போது, செய்யுமோர் என்றாகும்: வினையாலணையும் பெயர் வினைமுற்றும் பெயரெச்சத்தோடு கூடிய சுட்டுப்பெயருமாக இருவகை வடிவிலிருக்கும்.