பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழிலக்கணத் தோற்றம் உஎ (3) செய்யகின்றான் - செய்கின்றான் - செய்கிறான் (இடைக் குறை) -he does. இங்ஙனம், கின்றான் எளனும் இறந்தகால முற்று, தனி வினை துணைவினை நிகழ்கால வினைமுற்று என மூன்று நிலை களை அடைந்துள்ளது. மூன்றாம் நிலையின் பின், இன்று கிறு என்பதை நிகழ்கால இடைநிலைகளாகப் பிரித்துக் கூறப் பட்டன. ஆநின்று என்றோர் இடை நிலையில்லை. செய்து நின்றான் என்று பொருள்படும் செய்யா நின்றான் என்னும் தொடர் மொழியையே, ஒரு சொல்லாகக் கொண்டு, ஆதின்று என்பதோர் இடைநிலையெனக் கூறினர் பவணந்தியார். பண்டையிறந்தகால எதிர்கால வினைமுற்று வடிவங்கள் . இ. கா. எ. கா. அவன் செய்து அவன் செய்யும் வள் " அவள் " வர் " அவர் வை

நாம் நீர் உம் என்பது எதிர்காலமுணர்த்தும் உகரவடிச் சுட்டுச் சொல்: ஒ. நோ, உம்மை எரிவாய் நிரயம். தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே, செய்யும் என்னும் முற்று தன்மை முன்னிலைகளிலும் படர்க்கைப் பலர்பாவிலும் * வழக்கற்றுவிட்டது. மலையாளத்தில் இன்றும் வழங்கு கின்றது. இறந்தகால வினையெச்சங்களாக இப்போது கூறப்படு பவை, செய்து, செய்பு. செய்யா, செய்யூ. செய்தென என்பவை. இவற்றுள், ஈற்றது தவிர ஏனையெல்லாம் தொழிற்பெயராகவே தோன்றுகின்றன. அவற்றை முறையே விழ்து, முடிபு, உணா, உறூ (உறூஉ) என்பவற்றோடு ஒப்பு நோக்குக. செய்து+என = செய்தென = செய்தானென்னும் படி,