பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உவுசு ஒப்பியன் மொழி நூல் கா : மகனே, தேவி, அண்ணா . வினிவேற்றுமை இரக்கக் குறிப்பும் வியப்புக் குறிப்பும் பற்றிய சில சொற்களைப் பிறப்பித்திருக்கின்றது. கா : ஐயோ, ஐயவோ, ஐயகோ, அன்னோ -இரக்கக் குறிப்பு: அம்ம, அம்மா, அப்பா - வியப்புக்குறிப்பு. வினைச்சொல் வினை என்னுஞ் சொல் விளை என்பதன் திரிபாகத் தெரி கின்றது. முதற் பெருந்தொழில் உழவு. வினைஞர் = மருத நிலத்தார், உழவர், விளைஞர்-- வினைஞர், விசைக்களம் - போர்க்களம். போர்க்களம் என்னும் பெயர் ஏர்க்களம், பொருகளம் என்னும் இரண்டிற்கும் பொது. விளை - வினை. ஓ. நோ. வளை - வனை. வினைச்சொல், முற்று எச்சம் என இருவகைப்படும். எச்சம், பெயரெச்சம் வினையெச்சம் என இருவகைப்படும். இவை பெயராகிய எச்சத்தையுடையது வினையாகிய எச்சத் தையுடையது என்னும் பொருளன. முதன் முதல் வினைச்சொற்கள் இறந்தகாலமும் எதிர் சாலமுமாகிய இரண்டுகாலமே காட்டின. இறந்தகால வினை முற்றுகள் இப்போதுள்ள எச்சவடிவாகவேயிருந்தன. செய்யும் என்னும் முற்றே இருதிணை ஐம்பால் மூவிடங்கட்கும் மலையாளத்திற்போல் எதிர்கால வினை முற்றாக வழங்கிற்று. நிகழ்காலவுணர்ச்சி தமிழர்க்குத் தோன்றிய போது, கில் என்னும் ஆற்றற்பொருள் வினையின் இறந்தகால முற்றுவடி வமே நிகழ்கால வினை முற்றாகக் கொள்ளப்பட்டது. அதன் மூன்று நிலைகளாவன : (1) கின்றான் = ஆற்றினான். ஒ, நோ. நின்றான், சென்றான். (3) செய்யகின்றான் - செய்ய ஆற்றினான், அவனுக்குச் செய்ய முடிந்தது. ஒ. தோ; செய்ய பாட்டினான், (வழக்கற்றது) செய்ய மாட்டுவான் (எ. கா.)