பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கணத் தோற்றம்

உஅச

இவை அஃறிணை வினை முற்றீறுகளே, எழுவாய்த் தொடர் வினைமுற்றுத் தொடராக மாற்றிக் கூறப்பட்டதால் இவ்வுருபுகளுண்டாயின.

கா : புத்தகம் அம்பலவாணனது - அம்பல) வா கனனது புத்தகம். புத்தகம் எனாது-எனாது புத்தகம். ) ஒருமை. புத்தகங்கள் கண்ணன - கண்ணன புத்தகங்கள் (பன்மை ). இன் அன் என்பவை எண் காட்டாதன. இல் (7 ஆம் வே. உ.)-இன்-அன். கா : அதன், வேரின், ' உடைய என்பது உடைமை என்னும் பண்புப் பெயரடி யாய்ப் பிறந்த குறிப்புப் பெயரெச்சம். அது, இன், அன் என்லும் உருபுகள் கலந்தும் வரும். அது என்பது அத்து என் இரட்டியும், து எனக் குறைந்தும் வரும், கா அத்து + இன் = அத்தின், இன் + அது - இனது. இன்-- து ம இற்று. இன்+து+இன் -இற்றின், அன்+ அது = அனது. அன் + து = அற்று. அன் + து + இன் = அற்றீன், இங்ஙனமே பிறவும், 7 ஆம் வேற்றுமையுருபுகள் இல் முதலியன. அவை பின்வருமாறு நால்வகைப்படும் : (1) இடப்பெயர், கா : இல் (வீடு), (2) அரு கிடப்பெயர். கா : முன், பின், இடம், வலம். (3) சினைப்பெயர். கா : கண், கால், கை, வாய், தலை, (4) புணருருபு. கா : இடம் + அத்து -இடத்து, இடம் + அத்து+இல் = இடத்தில், 8ஆம் வேற்றுமையுருபு பெயரின் விளித்தற்கேற்ற திரிபே. அது பெரும்பாலும் ஈற்று நீட்டம். அது சேய்மையும் உயரமுங் குறிக்கும். * ஏ ஓ என்னும் நெடில்கள் சேர்வதாலும், ஈற்றில் அல்லது ஈற்றயலிலுள்ள குறில்கள் நீளுவதாலும் உண்டாகும்.