பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உஅச ஒப்பியன் மொழி நூல்


கா : ஊரானொரு கோயில் = ஊருடன் அல்லது ஊர் தொறும் ஒரு கோயில்.

கொடியொடு துவக்குண்டான் = கொடியால் துவக்குண்டான்.

சுருவி உயர் திணை அஃறிணையென இருவகை. அவற்றுள் உயர்திணைக் கருவியே, எழுவாய் (கர்த்தா) என்று பிரித்துக் கூறப்படுவது.

இவற்றையெல்லாம் நோக்காது, 3 ஆம் வேற்றுமை வேறுபட்ட பொருள்களை யுடையதென்றும், வடமொழியைப் பின்பற்றியே தமிழில் எட்டு வேற்றுமை யமைக்கப்பட்டன வென்றும் கூறினர் கால்டுவெல் ஐயர்.

கொண்டு என்பது உடனிகழ்ச்சிப் பொருட் சொல்லுருபு. கொண்டு பிடித்து. உளிகொண்டு = உளியைக் கையிற் கொண்டு.

4 ஆம் வேற்றுமையுருபு கு.

இஃது ஒக்க என்னும் வினையெச்சத்தின் திரிபாயிருக்கலாம். மழவன் நம்பியொக்கக் கொடுத்தான், திருவாணன் (ஸ்ரீநிவாசன்) ஊரொக்கப் போனான், என்பவை பொருத்தமாயிருத்தல் காண்க. ஒக்க - (ஒக்கு)-உக்கு(அக்கு)-கு. கா : அழகன் + உக்கு = அழகனுக்கு. என்+அக்கு - எனக்கு, அவன் +கு= அவற்கு.

பொருட்டு (பொருள்+து) நிமித்தம் என்பவை 6 ஆம் வேற்றுமை யுருபோடும், ஆக என்பது குவ்வுருபோடும் கூடி 4 ஆம் வேற்றுமைச் சொல் ஒருபாக வரும்.

5 ஆம் வேற்றுமையுருபு இல், இன்:

இல் (7 ஆம் வே, உ)--இன், இருந்து, நின்று என்னும் எச்சங்கள், இல் இன் என்பவற்றோடு சேர்ந்து வரும்: இவற்றுள் முன்னது இருந்த நிலையையும் பின்னது நின்ற நிலையையுங் குறிக்கும்,

6 ஆம் வேற்றுமையுருபு எண் காட்டுவனவுங் காட்டாதனவு மாக இருவகை.

அது ஆது அ என்பவை எண் காட்டுவன. அது--து.