பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழிலக்கணத் தோற்றம் உங


இது ஆய் என்னும் வினையெச்சத்தின் திரிபாயிருக்கலாம், சோறாய்ச் சாப்பிட்டான், பெட்டியாய்ச் செய்தான் என்னும் வழக்குகள் இன்றுமுள்ளன, ஆய் என்பது ஐ என்று தெலுங் கிலும் திரிகின்றது.

கா : சாரமாயின (த.)-சாரமைன (தெ.).
3 ஆம் வேற்றுமையுருபு ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன்
ஆல்--ஆன். ஓ. நோ; மேல - மேன:

இல் (7 ஆம் வே, உ:)-ஆல், ஒ. நோ. எழில்--எழால்: மையில் எழுதினான் என்னும் வழக்கை நோக்குக, செருப்பாலடியென்பதைச் செருப்பிலடி யென்பர் வடார்க்காட்டு வட்டகையார்,

குடம் - உடம் - உடன் -உடல், குடம்பு - உடம்பு. குடங்கு-உடங்கு. குடக்கு-உடக்கு. குடம், குடம்பு முதலியவை கூட்டின் பெயர்கள், உடல் கூடுபோற் கருதப்பட்டது.

"குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு (குறள், 338.)

என்றார் திருவள்ளுவர்

'கூடுவிட்டிங் காவி தான் போனபின்பு" என்றார் ஔவை யார். 'கூடுவிட்டுக் கூடு பாய்தல்' என்பது அறிவராற்றல் குறித்த வழக்கு.

ஒருவனுடன் இன்னொருவன் செல்லுதல், ஒருவன் தன் உடம்போடு செல்வது போன்றிருக்கிறது.

உடன் என்னும் சொல்லுக்குப் பதிலாக, கூட என்னுஞ் சொல்லும் வழங்குகின்றது. கூடு (பெ)-கூடு (வி.)- கூட (நிகழ்கால வினையெச்சம்)

ஓடு என்பது சில காய்கனிகளின் கூடு. ஓடு-ஒடு,

தோடு என்பதும் இங்கனமே தோட என்பது தெலுங்கில் 3 ஆம் வேற்றுமை உடனிகழ்ச்சியுருபு. ஒ. நோ, கூடு - கூடா

ஆல், ஓடு என்னும் ஈருருபுகளும், தனித்தனி கருவி உடனிகழ்ச்சி யென்னும் இருபொருளிலும் வழங்கும்.