பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

4க) ஒப்பியன் மொழி நூல் கா : வினைமுற்று அவை செய்த * செய்கின்ற செய்யும் பெயரெச்சம் செய்த பையன் செய்கின்ற | செய்யும் உள்ள நல்ல படர்க்கைப் பலவின் பால் வினைமுற்று பிற பாலிடங் கட்கும் வழங்கக்கூடியதை, அல்ல என்னும் படர்க்கைப் பல வின் பால் எதிர்மறைச்குறிப்பு வினைமுற்று, இப்போது இரு திணை ஐம்பால் மூவிடங்கட்கும் வழங்குதல் நோக்கி யுணர்க. வினைமுற்றே பெயரெச்சமாவதை 6 ஆம் வேற்றுமை யா முணர்க, கிழமை வேற்றுமை பெயரெச்ச வடிவின தென்று மாக்ஸ் முல்லரும் கூறுகிறார். வினையெச்சம் : இறந்தகால வினையெச்சங்கள் முன்னர்க் கூறப்பட்டன. தழீஇ என்பதன் பண்டை வடிவம் தழீ என் றிருந்ததாகத் தெரிகின்றது. தழி என்பது நீண்டு தழீ என்றாகி யிருக்கலாம், j என்பது சொல்லீ நாகாதென்று கொண்டு, பிற்காலத்தார் இகரஞ் சேர்த்திருக்கலாம். குரி--குரிஇ (குருவி)=தறியது. தழுவு குருவு (குறுகு) என்னும் பிற்றை வடிவங்கள், தழுவி குருலி என வினையெச்சம் (அல்லது தொழிற்பெயர்) அல்லது தொழிலி பெயர் ஆகும். 'இ' என்னும் ஈறு இம்முப் பொருளிலும் வரும், குழு மரு உறு என்பவை குழு மரு உறூ என்று தொழிற் பெயராயின. குழுஉ மரூஉ உறூஉ என்பன பிற்கால வடி வங்கள், ஆடூஉ மகடூஉ என்னும் வடிவங்கள் இன்னிசை பற்றி முன்னவற்றைப் பின்பற்றியவை, ஆன் --- ஆடு-ஆடூஉ, மகள் - மகடு--கடூஉ, ஆடு +அவன் - ஆடவன், நிகழ்கால வினையெச்சம் என்று செய்து கொண்டு (doing) என்னும் வாய்பாட்டைக் கூறினால் கூறலாம். - செய்ய' என்பது உண்மையில் திகழ்கால வினையெச்சமன்று. அது எதிர்கால வினை யெச்சமாகவே கூறற்குயேது: