பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழிலக்கணத் தோற்றம் உகக செய்யியர் செய்யிய செய்ய என்பவை வியங்கோள் வினையைக் கூறுமிடத்துக் கூறப்படும். செய்யின் = செய் (தொழிற்பெயர்) + இன் (5-ஆம் வே, 2, ஏதுப்பொருள்): செய்தால் = செய்து (தொழிற்பெயர்)+ஆல் (3 ஆம் வே. உ.) | செயற்கு = செயல் + கு (4-ஆம் வே. உ.) செய்ம் மன = செய்யும் (எ; கா. வி. மு.)+என = செய்ய மென- செய்ம்மென - செய்ம்மன = செய்யும் என்னும்படி. பின், முன், கால், கடை, வழி, இடத்து, போது முதலிய வினையெச்ச வீறுகள் காலப்பெயர்களும் இடப்பெயர்களு மாகும். இவை பெயரெச்சத்தோடு சேர்த்து அதற்கு வினையெச்சத் தன்மையுண்டாக்கும் சொல்லீறுகளாகும். அடுக்கிற்று வினைமுற்றுக்கள் : சில வினைமுற்றுக்கனில் ஈறுகள் அடுக்கிவரும். கா ! செய்தான் செய்தன் +அன் = செய்தனள், + அன் = செய்தனன்,+அர் = செய்தனர்,+அ = செய்தன, என்னுமான் -. என் மான் - பன்மன் -- ஆர் = என்மனார் (எ. கா. வி. மு.) ஓ. நோ. மகனார், சாத்தனார். செய்தனன் என்பதில், ஈற்றயல் 'அன்' ஆண்பாலீறே. அது குறுகிய வடிவாயிருத்தலின் மேலோர் 'அன்' சேர்க்கப் பட்டது. 'ஆன்' ஈறாயின் தனித்தே நிற்கும். ஒரே யீறும் அடுக்கிவரும் என்பதை, மரத்தது என்னும் சொல்லாலறி யவாம்: மரம்+ அத்து (அது)+அது = மரத்தது. ஈற்றயல் 'அன்' பொருள் மறைந்த பின் பிறபாலிடங்கட்கும் சென்றது: செய்தன் என்பது திணை பால் தோன்றாத பண்டைக்காலத்த தெனினுமாம்