பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உகூஉ ஒப்பியன் மொழி நூல்

தன்மை வினை

இறந்த காலம் :

ஒருமை-கண்டு, வந்து, சென்று.

இவை முற்கூறப்பட்ட செய்து என்னும் வாய்பாட்டுப் பண்டை இறந்தகால வினைமுற்றுக்கள்.

பன்மை - கண்டும், வத்தும், சென்றும். இவை, யாம் நீம் தாம் என்பவற்றைப்போல் பன்மையுணர்த்தும் மகர மெய்யீற்றவை.

திர்காலம்:

ஒரு ம-செய்கு, போது:

இது இயல்பான வினைவடிவம். முதன் முதல் எல்லாச் சொற்களும் உயிரிலேயே இற்றன. இப்போது மெய்யீற்றனவா யிருப்பவையெல்லாம் முதலாவது உயிரீற்றனவாகவே யிருந்தன. எல்லாச் சொற்களின் ஈற்றிலும் உகரம் அல்லது இகரம் ஒலிப்பெளிமைக்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இவற்றுள் உகரத்தை Eaunciative 'u' என்பர் கால்டுவெல் ஐயர். இவ்வுகரம் குற்றியலுகரம். இது சில வினையீற்றில் வகரமெய் சேர்ந்து 'வு'என வழங்கும். 'வு' 'கு' ஆகும் இஃது ஓரியன்மை (uniformity) தோக்கிப் பிறசொற்களின் ஈற்றிலும் கொள்ளப்பட்டது, வ--க, போலி,

கா : காடகன்ணு , நில்லு' கையி, பாயி! ஏவு, மருவு; ஆகு,

போகு. |

நட, கொடு என்பவற்றின் நிகழ்கால வினையெச்சங்கள் நடன கொட என்றிராமல், நடக்க கொடுக்க என்றிருப்பதையும், சில விடங்களில் கொடுப்பான் என்பது கொடுக்குவான் என்று வழங்குவதையும் நோக்குக. அமைத்து தொலைத்து என்பவை கழக நூல்களில் அடைச்சி தொலைச்சி என வழங்கு இன்னை, இவற்றின் பகுதிகள் அடைச்சு தொலைச்சு என்பனவாகும், போது என்பது போகு என்பதன் திரிபு:


தமிழ் பண்படுத்தப்பட்டபோது, சொற்களின் வேரைச் சேராத எழுத்துக்களெல்லாம் விலக்கப்பட்டன. அங்ஙனம் விலக்கியபோது, வல்லின மெய்யின் பின்வருபவை மட்டும் விலக்கப்படவில்லை ஒலித்தற் கருமையாகாமைப் பொருட்டு: