பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழிலக்கணத் தோற்றம்

உகூங


இயல்பான வினைவடிவமே முதலாவது தன்மை யொருமைக்கு எதிர்காலத்தில் வழங்கியிருக்கின்றது. “மடுக்கோ கடலில் விடு திமி லன்றி மறிதிரை மீன் படுக்கோ பணிலம் பலகுளிக் கோபரன் றில்லை முன்றிற் கொடுக்கோ வளைமற்று நும்மையர்க் காயகுற் றேவல் செய்கோ தொடுக்கோ பணியீ ரணியீர் பலர் நுஞ் சுரிகுழற்கே*

என்னுஞ் செய்யுளிலுள்ள செய்கு என்னும் வாய்பாட்டு வினைகளையும், செய்தேன் என்னும் எதிர்கால வினைமுற்று வடிவத்தையும் நோக்குக,

செய்கு என்பது, வினைகள் பாலீறு பெறாததும் நிகழ் காலவினை தோன்றாததுமான பண்டைக் காலத்தில் தோன்றியது.

பன்மை-செய்கும், போதும்.

செல்லுது என்பது, பகுதி நீண்டு, செல்+து = சேறு என்று ஒருமையிலும், சேறும் என்று பன்மையிலும் ஆகும். இங்ஙனமே கொள்ளுது என்பதும் ஒருமையில் கோடு (கொள் +து) என்றும், பன்மையில் கோடும் என்றும் ஆகும், துவ்வீறு போது என்னும் வினையினின்றும் தோன்றியது. இவற்றையறியாமல், குடுதுறு என்பவும், கும் டும் தும் றும் என்பவும் தன்மைவினைமுற்றீறுகள் எனக் கூறினர் இலக்கணிகள். இங்ஙனமே, படக்கையொன்றன்பாற் குறிப்பு வினைமுற்றீறுகளையும் து று டு என்றனர் இம்மூன்றுள், (அது என்பதன் முதற்குறையான) 'து' ஒன்றே உண்மையான ஈறாகும்.

கா : உடையது--உடைத்து.
கண்+அது கண்ணது: கண்+து =கட்டு,
தாள்+அது = தாளது; தாள் +து = தாட்டு.
அன்+அது = அன்னது; அன்+து = அற்று:
பால்+அது = பாலது; பால்+து = பாற்று.

பிற தன்மை வினையீறுகள் தன்மைப் பெயர்களும் அவற்றின் திரிபுமாகும்,

ஒருமை : ஏன்-என், (நான்)-(ஆன்)- அன் - அல் :

  • திருக்கோவை, 63.