பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உகூசு ஒப்பியன் மொழி நூல் "

பன்மை : ஏம்--எம். (நாம்)-ஆம்-அம். (கண்டும் செய்தும் முதலியவற்றிலுள்ள) உம்-ஓம்.

முன்னிலை வினை

முன்னிலைவினை, ஏவல்வினை செயல்வினை என இரு வகைப்படும். செயல்வினை ஒருமை ஈறுகள் முன்னர்க் கூறப்பட்டன.

ஏவல்வினை, ஒருமை பன்மையென இருவகைப்படும், அவற்றுள், ஒருமை பின்வருமாறு எழுவகையாயிருக்கும்:

(1) பகுதி: கா : செய், போது.
(2) முன்னிலைப் பெயரீறுடையது. கா : (செய்நீ)-
     (செய்தீ)- செய்தி,
(3) வேண்டுகோளெதிர் மறைமுற்று. கா : செய்யாய்
    (செய்).
(4) எதிர்கால வினைமுற்று. கா : செய்வாய்.
(5) நிகழ்கால வினையெச்சம். கா : செய்ய.
(6) தொழிற்பெயர். கா : செயல்,
(7) துணைவினைபெற்றது. கா: செய்ய + விடு = செய்யட்டு.

பன்மையேவல் பின் வருமாறு அறுவகைப்படும்.

(1) முன்னிலைப்பெயரீறு பெற்றது.

(நீர்)-(தீர்)-திர். கா : செய்திர்,
நூம்-நும் - உம், கா : செய்யும்.
உம்+கள் = உங்கள். கா : செய்யுங்கள்.
உம்+(ஈம்)-(இம்) - இன், கா : செய்யுமின், செய்மின்,
(2) வேண்டுகோளெதிர்மறைமுற்று, கா : செய்யீர்,
(3) எதிர் கால வினைமுற்று, கா : செய்வீர்.
(4) நிகழ்கால வினையெச்சம், கா : செய்ய.