தமிழிலக்கணத் தோற்றம்
உகூரு
(5) | தொழிற்பெயர். | கா | : | செயல். |
(6) | துணைவினை பெற்றது. | கா | : | செய்யட்டும் (செய்யவிடும்). |
செயல்வினைப் பன்மையீறுகள் ஈர்இர் ஆகும். நீர்-ஈர்-இர்.
கா : செய்நீர், செய்தனிர்; செய்கின்றீர், செய்கிறீர் : செய்வீர், செய்விர்.
'கள்' ஈறு முன்னிலை படர்க்கைப் பன்மையில் ஈற்றுமே வீறாய் வரும். ஒருமையீறு, பன்மையீறு, பன்மையீற்று மேலீறு என்னும் மூன்றும் முறையே, இழிந்தோன் ஒப்போன் உயர்ந்தோன் என்னும் மூவர்க்கும் உலகவழக்கிற் கொள்ளப்பட்டன. இவ்வியல்பு மலேய மொழிகளிலும் உள்ளது.
படர்க்கை வினை முற்கூறப்பட்டது.
வியங்கோள் வினை
வியம் = ஏவல், வியங்கொள்-வியங்கோள் (முன்னிலை திரித்த தொழிற் பெயர்). உயரச்சுட்டு செல்லுதற் பொருளில் வரும் என்று முன்னமே கூறப்பட்டது. ஓய் = செலுத்து. ஒய்+அம் = ஓயம். ஒய்—உய்+அம் உயம். உய் செலுத்து. ஒ. நோ, ஒ—ஒடு ஏ—ஏவு=ஏகு. ஏவு பிறவினைப் பொருளிலும் ஏகு தன்வினைப் பொருளிலும் வழங்குகின்றன. ஆனால், இவற்றுள் ஒவ்வொன்றுக்கும் அவ்இருபொருளும் உள. உயம்—வியம். ஏவல்குறித்த வியம் என்னும் சொல், மதிப்பான ஏவலுக்குப் பெயராயிற்று. “தேர்வியங்கொண்ட பத்து”[1] என்னுஞ் சொற்றொடரில், வியங்கொள் என்னுஞ் சொல் செலுத்தற்பொருளில் வந்திருத்தல் காண்க.
ஏவலும் வியங்கோளும் சொன்முறையில் ஒன்றே. தொழிற்பெயரே ஏவலாகவும் வியங்கோளாகவும் பயன்படுத்தப்பட்டது. “செயல்” “எனல்” [2] என்று திருவள்ளுவரும் “நிலையல்” “கொளலே”[3] என்று தொல்காப்பியரும் கூறுதல் காண்க. நில் (தொழிற்பெயர்)+ஈயல்= நிலீயல் = நின்றருள், ஈயல்ஈதல், நிலீயல்—நிலீயர் — நிலிய - நிலிய, ஈயல் + ஈயர் — ஈய—இய—அ—க. ஈயர் — இயர், செய்யிய—செய்ய. செய்கு +அ=செய்க, போகு+அ = போக. நட+அ= நடக்க. போக
ஒ.மொ.—24