பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழிலக்கணத் தோற்றம் உக்கூ (8) குறைவினை (Defective Verb) கா : உண்டு , இல்லை ; உண்டு இல்லை என்பனவும் பா லீறு பெற்றவையே : இப் போது பாற்பொருவிழந்து வழங்குகின்றன: உன் அது - உள்ளது. உள்+து அ உண்டு . இல்+ அது = இல்லது. இல்+து = இன்றும் உள்+அ= உள்ள - உள. இல் + அ = இல்ல-இல-இலை. இல்ல - இல்லை , ஓ. நோ. அம்ம--அம்மை . செந்தமிழில் ஐகாரவீறாயுள்ள பல சொற்கள், உலக வழக்கிலும் ஏனைத் திராவிட மொழிகளிலும் அகரவீறாகவே வழங்குகின்றன. முன்னது இயல்பான வடிவும் பின்னது பண் படுத்திய வடிவுமாகும், பெயரெச்சம் : பெயரெச்சம் பின்வருமாறு பலவகைகளில் உண்டாகும்; (1) வினைப்பகுதி. கா : பெரு, சிறு. (3) பலவின் பால் வினைமுற்று. கா : நல்ல, சின்ன, பெரிய, பெயரிய: இய என்னும் ஈற்றில், இகரம் இறத்தகாலவினையெச்ச வீறும் அகரம் பலவின்பால் வினைமுற்றுமாகும், கா : இ. கா. வி, எ, ப, பா, வி, மு. பெயரெச்சம், ஓடிய ஓடிய இறந்தகால வினையெச்சமே முதலாவது முற்றாயிருந்த தென்றும், பின்பு பாலீறு சேர்க்கப்பட்டுத் தற்கால முற்றான தென்றும் முன்னமே கூறப்பட்டதை நினைக்க. கா : செய்து+அ = செய்த(வி. மு.) - செய்த (பெ. எ.). ஓடிய-ஓடின. போதிய-போகின -- போயின, போகபோய்+அ = போய-போன, உறங்கிய - உறங்கின, ஆயஆன, ய| ள, போலி, ஓ. நோ. யால்- நான், யமன் (வ.) - தமன். செய்தன (செய்தன்+அ) என்னும் வடிவம், ஆண்பால் வினை முற்றின் மேல் பலவின்பாலீறு சேர்ந்த அடுக்கீற்று வினை யாகும்.