பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழிலக்கணத் தோற்றம்

௩௦௧

வினையெச்சம் : (1) தொழிற்பெயர், கா: இன்றி (இல்+தி), இல்லாமை.

(2) முதல் வேற்றுமைப்பெயர், கா : வெளி, புறம்.

(3) திரிவேற்றுமைப்பெயர். பிறகால், வெளியில்:

(4) வினையெச்சவீற்றுப் பெயர். கா: நன்றாய், நன்றாக.

(5) முற்றெச்சம். கா : வேலினன் {வந்தான்).

செயப்பாட்டு விளை

(1) நிகழ்காலவினையெச்சம்+படு (to suffer). கா : செய்யப்படு

செயப்படுவது செயப்பாடு. செயப்பாட்டைக் கூறும் வினை செயப்பாட்டுவினை.

(2) முதனிலைத்தொழிற்பெயர் +உண் (to experience, lit to eat). கா : கொல்லுண்,

(3) ஈறுபெற்ற தொழிற்பெயர்+உண். கா: கொலையுண்.

(4) ஈறுபெற்ற தொழிற்பெயர் +ஆ (to become), போ முதலியன; கா : கொலையானான், விலைபோகும்:

தமிழ்ச் செயப்பாட்டு வினை முறை ஆங்கில முறையினின்றும் வேறுபட்டிருப்பது கொண்டு, தமிழில் உண்மையான செயப்பாட்டு வினையில்லையென் நயிர்த்தார் கால்டுவெல் ஐயர், ஆங்கிலச் செயப்பாட்டு வினைப்பெயரே தமிழ்ச் சொல்தான் : E. passive, adj. Fr-L. passivus from patior, to suffer (root PAT[1] pat=படு, passion = பாடு, (1—3, போலி (Permutation).

பிறவினை —Causal Verb

பிறவினை என்பது இருமடி அல்லது பன்மடி, ஏவல்: "செய்யென் வினைவழி விப்பி தனிவரின்

செய்வியென் னேவ லிணையினீ ரேவல் (138) என்று தன்னூலாருங் கூறுதல் காண்க.


  1. * Cassell's Latin Dictionary, p. 396. connected with Gr. pascho),