பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்பியன் மொழி நூல்

________________


தொழிற்பெயர் ஏவல் வினையாக வருமென்பது முன்னர்க் கூறப்பட்டது. துணைவினை பெற்றவையொழிந்த, ஏனைய பிற வினை வடிவுகளெல்லாம் தொழிற்பெயர்களே,

கா : வாழ்து - வாழ்த்து . து -சு. பாய்+சு - பாய்ச்சு ; துவ்வீறே புணர்ச்சியில் டுறு வாகும். கா காண்+து + காட்டு, உருள்+து = உருட்டு, தின்+ து - தீற்று, நால்+து = நாற்று:

செய்யப்பண், வரச்செய் முதலியன துணைவினை பெற்றவை.

குறைவினை-Defective Verb

எல்லாத் திணைபாலிடங்கட்கும் புடைபெயராத வினை குறைவினையாகும்.

கா ! வேண்டும், கூடும், போதும். வேண்டு - விரும்பு. எனக்கு அது வேண்டும் யான் அதை விரும்புவேன். விருப்பம் இங்குத் தேவையைக் குறிக்கும் : நீ அதைச் செய்யவேண்டும் = நீ அதைச் செய்ய யான் விரும்புவேன்.

உனக்கு என்ன வேண்டும் . நீ என்ன விரும்புவாய். செய்யும்' என்னும் வாய்பாட்டு எதிர்கால வினை முற்றாகிய 'வேண்டும்' என்பது, இன்று பொருள்மறைந்து வழங்குகின்றது. இது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தொடங்கின தாகும்.

வழுவமைதி வினை -Anamolous Verb கா : அல்லேன்-வழாநிலை (நான்) அல்ல - வழுவமைதி.

ஒட்டுவினை

மற்றச் சொற்களோடு சேர்ந்தே வழங்கும் வினை ஓட்டு வினை : கா : (ஆகும்) ஆம்-செய்யலாம், செய்தானாம். ஆக்கும்-(ஆகும்) செய்வானாக்கும், புலவனாக்கும்,