பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

உலக முதன்மொழிக் கொள்கை கூகஎ



பல நீசியத் (Polynesian) தீவுகளில் தெபி (Tepi) என்றொரு வழக்கமுள்ளது. அதன்படி, அரசன் பெயராவது அதன் பாகமாவது வருகின்ற சொற்களையெல்லாம் மாற்றிவிடு கின்றனர். இவ்வழக்கம் தென்னாப்பிரிக்காவிலும் உள்ளதாம்.

வட மொழி உலக முதன்மொழியாக முடியாமை

மொழிகளின் இயல்பையறியாத பலர், வடமொழி உலக முதன் மொழியாயிருக்கலாமென்று கருதுகின்றனர்.

உலகில் முதலாவது தோன்றிய திருந்திய மொழி தமிழே, குமரிநாட்டில் தமிழ் குறிப்பொலி நிலையிலிருந்த போது பிரிந்த மக்கள், ஆப்பிரிக்கா, தென்கண்டம், அமெரிக்கா முதலிய இடங்கட்கும், அசை நிலையிற் பிரிந்த மக்கள் கடாரம் சீன வட ஆசியா ஐரோப்பா முதலிய இடங்கட்கும் சென்றதாகத் தெரிகின்றது. அசைநிலையிற் பிரிந்த மக்களின் மொழிகளே, துரேனியம் அல்லது சித்தியம் என்று கூறப்படும் குடும்பத்தவை.

பால்டிச் சுடற்பாங்கரில், துரேனியத்தின் திரிபாகவே ஆரியம் தோன்றியிருக்கின்றது. பால்டிக்கின் வடபாகங்களில் பின்னியம் (Finnish) என்னும் துரேனிய மொழி வழங்கு வதும், சுலீடியம் (Swedish) டேனியம் (Danish) முதலிய மொழிகளில் தமிழ்ச்சொற்கள் இருப்பதும், ஜெர்மானியத்திலுளள சில சொற்கள் ஆரிய இலக்கிய மொழிச்சொற்கள் சிலவற்றிற்கு மூலமாயும் தமிழுக்கு நெருக்கமாயுமிருப்பதும், ஆட்டோ சிரேதர் கூறியிருப்பதும் இக்கொள்கைக்குச் சான்றுகளாம்.

ஆரியஞ்சென்ற தமிழ்ச்சொற்கள் பின் வருமாறு மூவகைய.

(1) ஆரியரின் முன்னோர் குமரிநாட்டினின்று பிரிந்து போனபோதே உடன் சென்றவை.

கா ! தமிழ் வட இந்தியம் மேலையாரியம் கீழையாரியம் நான் மைன் me நாம் ஹம் wir, we vayam நூன் தூ du, tu tvam தூம் தும் ye, you yuyam இருத்தி - eart. es asi