பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பார்ப்பனர்,ஐயர்,அந்தணர் என்னும் பெயர்கள்

31

மெட்ராஸ் பகுதிகளுக்கு உட்பட்ட தகடூர் நாட்டில் வாழ்ந்தனர் தமிழ்நாட்டு என்ற பெயர் வருவதற்கு முன்பாகவே சக்கிலியர்கள் வாழ்ந்தார்கள். அத் தொழிலைச் செய்துகொண்டிருந்தவர் பறம்பர் (செம்மார்) என்னும் தமிழ வகுப்பார். இவர் பாணருள் ஒரு பிரிவார். பாணர் பகடைகள். பாணரும் சக்கிலியரைப்போல் மாடு தின்பவர். மாட்டுத் தோலைப் பதனிட்டு, அதனாற் செருப்பு, கூனை முதலிய பொருள்களைச் செய்வது, மாடுதின்பார்க்கே மிக இசையும். தோல் வேலை செய்பவர் கடைக் கழகக் காலத்திலேயே தமிழ்நாட்டிலிருந்தமை, தோலின் துன்னர் என்று சிலப்பதிகாரத்தில் கூறியிருப்பதால் அறியப் படும். பாணருக்குத் தையல் தொழிலுமுண்டு. “பாணர்க்குச் சொல்லுவதும்.... தை....” என்று காளமேகப் புலவர் கூறியிருத்தல் காண்க. தையல் என்னும் பெயர் துணி, தோல் என்னும் இரு பொருள்களை மூட்டுவதற்கும் பொதுவாகும். துன்னம் என்னும் பெயரும் இங்ஙனமே. சக்கிலியர் பறம்பர் தொழில் மேற் கொண்ட பின், செம்மார் சக்கிலியருக்குச் செம்மான் என்னும் தமிழ்ப் பெயரும் சக்கிலி[1] என்னும் ஆதித்தமிழர் பெயரும் இன்று வழங்கி வருகின்றன. இங்ஙனமே பார்ப்பனருக்குப் பார்ப்பார் என்னும் தமிழ்ப் பெயரும் பிராமணர் என்னும் ஆரியப் பெயரும் என்க.

ஐரோப்பாவிலிருந்து கிரேக்கரும் ரோமரும் தமிழ் நாட்டிற்கு வந்து, குலமுறையாக ஒரு குறிப்பிட்ட தொழிலைச் செய்யாமை யால், யவனர் என்னும் கிரேக்கப் பெயராலேயே அழைக்கப்பட்டனர்.

தமிழ்நாட்டில் இதுபோது, பார்ப்பனருக்குத் தொழிலால் நெருங்கியுள்ளவர் புலவர், பண்டாரம், குருக்கள், பூசாரி, போற்றி, உவச்சன், நம்பி என்று கூறப்படும் தமிழக் குலத்தா ராவர். இவருடைய முன்னோரே, ஒருகால் தமிழப் பார்ப்பன ராயிருந்திருக்கலாமோ என்று, இவர் பெயராலும் தொழிலாலும் ஐயுறக் கிடக்கின்றது.

ஐயர், அந்தணர்

ஐயர் என்பது ஐயன் என்னும் பெயரின் பன்மை. ஐயன் என்னும் பெயருக்கு 'ஐ' என்பது பகுதி.


  1. சக்கிலி என்பது சாஷ்குலி (= புலையர்) என்னும் வடசொல்லின் திரிபென்பர் எட்கார் தட்ஸ்ற்றன் (Edgar Thurston)