பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

முன்னுரை

தலைஇய நற்கருமம் செய்யுங்கால் என்றும்
[1]புலையர்வாய் நாட்கேட்டுச் செய்யார் - தொலைவில்லா
அந்தணர்வாய் நாட்கேட்டுச் செய்க அவர்வாய்ச்சொல்
என்றும் பிழைப்பதில்”

என்றார் பெருவாயின் முள்ளியார்.

இங்ஙனம், தமிழில் சில நூல்களை வரைந்து தாங்களும் தமிழ்ப் பற்றுடையவர் என்று காட்டிக்கொண்டு, வட மொழியையும் ஆரிய வரண வொழுக்கத்தையும் தமிழ் நாட்டிற் புகுத்துவது ஆரியர் தொன்றுதொட்டுக் கையாண்டு வரும் வலக்காரங் (தந்திரம்)களில் ஒன்றாகும்.

ஆரியரை உயர்த்திக் கூறியுள்ள சில தமிழரும் உளர். அவர் அறியாமையும் தந்நலமுங்கொண்ட குலக்கேடராதலின், அவர் செய்தி ஈண்டாராய்ச்சிக்குரியதன்று.

சிவனியரும்[2] திருமாலியருமான இருசார் பார்ப்பனருள், திருமாலியரே[3] தமிழுக்கும் தமிழர்க்கும் சிறந்தவராவர். திருமாலியர் தனித் தமிழரான நம்மாழ்வாரை ஆழ்வார் தலை வராக்கினர்; பறையரான திருப்பாணாழ்வாரைத் தொழாசிரியர் (அர்ச்சகர்) தோள்மேல் தூக்கித் திருவரங்கம் கோயிற்குள் கொண்டு போயினர்; நாலாயிர திவ்வியப் பனுவலைத் திரா விட மறையாகக் கொண்டனர்.[4]

சைவரோ, பார்ப்பாரான திருஞானசம்பந்தரை அடியார் தலைவராக்கினர்; தில்லையிற் சிவவுருவைக் கண்டு வழிபடப் பித்துக் கொண்ட, சிறந்த அடியாரான நந்தனார் என்னும் பறையரைச் சுட்டெரித்தனர்; தேவாரத்தை மறையாகக் கொள்ளாது, ஆரிய மந்திர வழிபாட்டு முடிவின்பின் ஓதுவிக்கின்றனர்.


  1. *. புலையர் = வள்ளுவர்
  2. 1. திருமால்-விஷ்ணு;திருமாலியம்-வைஷ்ணவம்;திருமாலியர்-வைஷ்ணவர்.
  3. 2. வடகலையார் தென்கலையார் என்னும் இருசார் திருமாலியருள், இங்குக் குறிக்கப்பட்டவர் தென்கலையார்.
  4. 3. தமிழ்நாட்டில் இந்தியை எதிர்க்கின்ற ஒரேயொரு பார்ப்பனரும், காஞ்சி பரவத்து ராஜகோபாலாச்சாரியார் என்னும் தென்கலைத் திருமாலியரே.