பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பார்ப்பனர் தமிழரை வென்ற வழிகள்

43

களையும் ஆவணங்களையும்[1] வடமொழியிலெழுதியும், பார்ப்பனருள்ள ஊர்களில், ஊராண்மைக் கழக உறுப்பினர்க்கு ஆரிய மறையறிவைத் தகுதியாக விதித்தும்,[2] பல்வகையில் வடமொழியை வளர்த்துத் தமிழை வளர்க்காது போனதுடன், வேண்டாத வட சொற்களைக் கலந்து அதன் தூய்மையையுங் கெடுத்து விட்டனர்.

(8) பிரித்தாட்சி :

பிரித்தல் என்னும் வெல்வழி ஆரியர்க்கே சிறந்த தன்மையாகும். ஒரு சிறுவகுப்பார் ஒரு பெருவகுப்பாரை வெல்வதற்கு அஃதொன்றே படையாம். பிரமா பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நால்வரணத்தாரையும் முறையே, தமது முகம், மார்பு, அரை, கால் ஆகிய உறுப்புகளினின்றும் தோற்றுவித்தார் என்று கூறும்போதே, பார்ப்பனர் நம் நாட்டு மக்களைப் பிரித்துவிடுகின்றனர்.

கல்விக்கு வாயும், போருக்கு மார்பும், இருந்து விற்றலுக்கு அரையும் (அல்லது நிறுத்தலுக்குச் சீர்க்கோலின் நடு நாவும்), உழைப்பிற்குக் காலும் சிறந்த உறுப்புகள் என்பதே மேற் கூறிய அணியின் கருத்தாமாயினும், அதன் எழுத்தியற் (literal) பொருளையே உண்மையான பொருளாகப் பார்ப்பனர் கூறி வருகின்றனர்.

பிராமணர் முதலிய நால்வரணத்தார்க்கும் சிறப்புப் பெயர், அணி, தொழில், ஊன்றுகோல், உரிமை, தண்டனை, புதைக்கும் திசை முதலிய பல பொருள்களையும் வெவ் வேறாகவே மனு தருமங் கூறுகின்றது.

தமிழ்நாட்டிலுள்ள பல குலங்களும் தொழில்பற்றித் தொன்றுதொட்டு வழங்கி வருபவையே; ஆயினும், அவை கூடியுறவாடாதபடி செய்தது ஆரிய முறையாகும், இப்போது ஆதி திராவிடர் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட் டோரை முதலாவது ஆரியர் மேலோரினின்றும் பிரித்ததை.

“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க் காகிய காலமும் உண்டே”

என்னும் தொல்காப்பிய (கற்பியல். 3)நூற்பாவா லறியலாம். இதில், மேலோர் என்றது அரசர், வணிகர், உழுவித்துண்ணும்


  1. செப்புப் பட்டயங்களும் கல்வெட்டுகளும்.
  2. 2. சோழவமிச சரித்திரச் சுருக்கம், பக். 53