பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43

முன்னுரை

(3) தமிழ் கற்றல் :

பார்ப்பனர் தமிழைக் கற்றுத் தமிழாசிரியராகித் தமிழில் நூல்களை இயற்றினதினால், தமிழரால் மிக மதிக்கப்பட்டனர்.

(4) வடமொழியில் நூலெழுதலும் தமிழ்நூல்களை மொழிபெயர்த்தலும்.

பார்ப்பனர் ஆரிய மறைகளைத் தமிழர்க்கு மறைத்து வைத்து, நூலாக எழுதப்படாது வழக்கிலிருந்த பல தமிழ் நாட்டுக் கதைகளையும் செய்திகளையும் வடமொழியில் எழுதியும், நூல்களாக இருந்த பல தமிழ்க் கலைகளை வடமொழியில் மொழி பெயர்த்தும் வைத்துக்கொண்டு, அவ் வடநூல்களை முதனூல்களாகவும் தென்னூல்களை வழி நூல்களாகவும் காட்டினர்.

வடமொழியில் நூலெழுதலுக்கு ஹாலாஸ்ய மான்மியத்தையும், மொழிபெயர்த்தலுக்குச் சங்கீத ரத்னாகரம் போன்ற இசைநூல்களையும் காட்டாகக் கூறலாம்.

(5) தற்புகழ்ச்சி :

பார்ப்பனர் தங்களைத் தேவர் என்றும், பூசுரர் என்றும் தங்கள் மொழியைத் தேவமொழியென்றும், தாங்கள் பிறப்பிலேயே உயர்ந்தவர்களென்றும், தங்களுக்கொப்பானவர் உலகத்திலேயே இல்லையென்றும் கூறினதுமல்லாமல், நூல்களிலும் வரைந்துகொண்டனர். அவர்களின் வெண்ணிறமும் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் ஒலிக்கின்ற வடமொழி யொலிகளும் அதற்குத் துணையாயிருந்தன.

(6) மதத் தலைவராதல் :

பார்ப்பனர் முருகன், திருமால் முதலிய தனித்தமிழ்த் தெய்வங்களுக்குச் சுப்பிரமணியன், விஷ்ணு முதலிய ஆரியப் பெயர்களையிட்டு, அவர்களை ஆரியத் தெய்வங்களாகக் காட்டி, அதற்கான கதைகளையும் புனைந்து கொண்டு, தமிழ் மதாசிரியர்களாகித் தமிழரின் கோயில் வழிபாட்டையும் மங்கல அமங்கல வினைகளையும் நடாத்தி வரலாயினர்.

(7) தமிழைத் தளர்த்தல் :

பார்ப்பனர் தமிழரின் வழிபாடு, மங்கல அமங்கல வினைகள் முதலியவற்றை வடமொழியில் நடத்தியும், நூல்-