பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பார்ப்பனர் தமிழரை வென்ற வழிகள்

45

பல குலத்தார் முறை செப்பிக் கொள்வதினாலும், பண்டைத் தமிழ்நாட்டில் குலப்பிரிவினை இருந்ததில்லையென்று அறியலாம்.

பார்ப்பனருக்கு உயர்வு, கல்வி, அலுவல், அதிகாரம், இலவச ஏவல், செல்வம், குலப்பெருக்கம் முதலியன வரண வொழுக்கத்தால் விளைந்த நன்மைகளாகும்.

கொலைத்தண்டமின்மை, போர் செய்யாமை, போர்க் களத்தினின்றும் விலக்கப்படல் முதலியவற்றால் குலப் பெருக்கமும், கோயிற்றொழில், கொடைபெறல், புரோகிதம், வேள்வி, பட்டவிருத்தி முதலியவற்றால் செல்வப் பெருக்கும் பார்ப்பனருக்கு உண்டாயினவாம். 'பார்ப்பானில் ஏழையு மில்லை பறையனில் பணக்காரனுமில்லை' என்பது பழமொழி.

குலத்திற் போன்றே மதத்திலும் பிரிவினை தோன்றிற்று, கடைக்கழகத்தில் சைவர், திருமாலியர், பௌத்தர், சமணர் என்னும்பல மதத்தாரிருந்ததினாலும், வேந்தன் (இந்திரன்) விழா வில் எல்லாத் தெய்வங்கட்கும் படைப்பு நடந்ததினாலும், சேரன் செங்குட்டுவன் சைவனாயும் அவன் தம்பி இளங்கோவடிகள் சமணராயுமிருந்ததினாலும், அரசர் பல மதக் கோயில்கட்கும் இறையிலிவிட்டதினாலும், பண்டைத் தமிழ் நாட்டில் மதப் பகையுமிருந்ததில்லையென்றறியலாம்.

(9) வடநாட்டாரை உயர்த்தல் :

இது பின்னர் விளக்கப்படும்.

(10) வடநாட்டுக் கதைகளைத் தமிழ்நூல்களிற் புகுத்தல் :

கற்பிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக, கண்ணகி, திலகவதி, புனிதவதி முதலிய பல தமிழ்ப் பெண்மணிகள் கதைகளிருப்ப வும், அவற்றை விட்டுவிட்டு, நளாயினி, சாவித்திரி முதலிய வட நாட்டுப் பெண்களின் கதைகளையே புத்தகங்களில் வரைவர். இங்ஙனமே, வில்லுக்குச் சிறந்த ஓரியும், கொடைக்குச் சிறந்த குமணனும், நட்பிற்குச் சிறந்த பிசிராந்தையும், உடம் பிறப்பன் பிற்குச் சிறந்த இளங்கோவடிகளும் தமிழப் பொது மக்கட்கு மறைக்கப்பட்டுளர்.

தமிழரின் சிறந்த தன்மை :

மதப்பற்று, மறம், அடுத்தாரைக் காத்தல், ஈகை, விருந் தோம்பல், நடுவுநிலை, நன்றியறிவு, மானம், உண்மை