பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரியத்தால் தமிழ் கெட்டமை

51

சங்கடம் – இடர்ப்பாடு சுதி(சுருதி) - கேள்வி
சங்கரி - அழி சுபம் - மங்கலம்
சங்கீதம் - இன்னிசை சுபாவம் - இயல்பு
சத்தம் - ஓசை சுயமாய் - தானாய்
சத்தியம் - உண்மை சுயராஜ்யம் - தன்னாட்சி
சத்துரு - பகைவன் சுரணை (ஸ்மரணை) - உணர்ச்சி
சந்ததி - எச்சம் சுவர்க்கம் - துறக்கம், உவணை
சந்தி - தலைக்கூடு சுவாசம் - மூச்சு(உயிர்ப்பு)
சந்திப்பு - கூடல் (Junction) சுவாமி - ஆண்டான், கடவுள்
சந்திரன் - மதி, நிலா சுவாமிகள் - அடிகள்
சந்தேகம் - ஐயம், ஐயுறவு சேவகன் - இளையன்
சந்தோஷம் - மகிழ்ச்சி சேவை - தொண்டு (ஊழியன்)
சந்நிதி - முன்னிலை சேனாபதி - படைத்தலைவன்
சந்நியாசி - துறவி சேனாவீரன் - பொருநன்
சம்பந்தம் - தொடர்பு சேஷ்டை - குறும்பு
சம்பாஷணை - உரையாட்டு சொப்பனம் - கனா
சம்பூரணம் - முழுநிறைவு சோதி - நோடு
சமாச்சாரம் - செய்தி சௌகரியம் - ஏந்து
சமுகம் - மன்பதை ஞாபகம் - நினைப்பு
சமுசாரி - குடும்பி (குடியானவன்) ஞானம் - அறிவு
சமுச்சயம் - அயிர்ப்பு தயவு - இரக்கம்
சமுத்திரம் - வாரி தருமம் - அறம்
சர்வமானியம் - முற்றூட்டு தாசி - தேவரடியாள்
சரணம் - அடைக்கலம் தானியம் - கூலம், தவசம்
சரீரம் - உடம்பு தினம் - நாள்
சன்மார்க்கம் - நல்வழி துக்கம் - துயரம்
சாதம் - சோறு துரோகம் - இரண்டகம்
சாதாரணம் - பொதுவகை துஷ்டன் - தீயவன்
சாஸ்திரம் - கலை (நூல்) தேகம் - உடல்
சாஸ்வதம் - நிலைப்பு தைலம் - எண்ணெய்
சாக்ஷி - கண்டோன் தோஷம் - சீர் (குற்றம்)
சிங்காசனம் - அரியணை நதி - ஆறு
சிநேகிதம் - நட்பு நமஸ்காரம் - வணக்கம்
சிரஞ்சீவி - நீடுவாழி நஷ்டம் - இழப்பு
சீக்கிரம் - சுருக்கு நக்ஷத்திரம் - வெள்ளி (நாண்மீன்)
சுகம் - உடல் நலம் (அல்லது இன்பம்) நாசம் - அழிவு
சுத்தம் - துப்புரவு நாதம் - ஒலி
சுதந்தரம் - உரிமை நிஜம் - மெய்
நிச்சயம் - தேற்றம்