பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

முன்னுரை

அர்ச்சனை - தொழுகை (வழிபாடு) உத்தேசம் - மதிப்பு
அர்த்தம்-பொருள் உத்தியோகம் - அலுவல்
அவசரம் - விரைவு (பரபரப்பு) உபத்திரவம் - நோக்காடு
அவசியம் - தேவை உபகாரம் - நன்றி
அவயவம் - உறுப்பு உபசாரம் - வேளாண்மை
அற்புதம்-புதுமை (இறும்பூது) உபயானுசம்மதமாய் - இருமையால் நேர்ந்து
அன்ன சத்திரம் - உண்டிச் சத்திரம் உபவாசம் - உண்ணா நோன்பு
அன்னவஸ்திரம் - ஊணுடை உபாத்தியாயர் - ஆசிரியர்
அன்னியம் - அயல் உற்சவம் - திருவிழா
அனுபவி - நுகர் உற்சாகம் - ஊக்கம்
அனுஷ்டி - கைக்கொள் உஷ்ணம் - வெப்பம்
அஸ்திபாரம் - அடிப்படை கங்கணம் - வளையல்(காப்பு)
ஆக்கினை (ஆணை) - கட்டளை கங்கண விஸர்ஜனம் - சிலம்பு கழி நோன்பு
ஆகாரம் - உணவு ஜோதிடன் - கணியன்
ஆச்சரியம் - வியப்பு கபிலை - குரால்
ஆசாரம் - ஒழுக்கம் கருணை - அருள்
ஆசீர்வாதம் - வாழ்த்து கர்வம் - செருக்கு
ஆதரி - தாங்கு (அரவணை) கவி - செய்யுள்
ஆதியோடந்தமாய் - முதலிலிருந்து முடிவுவரை கனகசபை - பொன்னம்பலம்
ஆபத்து - அல்லல் கஷ்டம் - வருத்தம்
ஆமோதி - வழிமொழி கஷாயம் - கருக்கு
ஆரம்பம் - துவக்கம், தொடக்கம் காவியம் - தொடர்நிலைச் செய்யுள்
ஆரோக்கியம் - நலம், நோயின்மை காஷாயம் - காவி
ஆலோசி - சூழ் கிரகம் - கோள்
ஆயுள் - வாழ்நாள் கிரீடம் - முடி
ஆனந்தம் - களிப்பு கிருகப்பிரவேசம் - புது வீடு புகல்
ஆஸ்தி - செல்வம் கிருபை - அருள், இரக்கம்
ஆக்ஷேபி -தடு கிருஷிகம் - உழவு
ஆட்சேபணை - தடை கோஷ்டி - குழாம்
இந்திரன் - வேந்தன் சக்கரவர்த்தி - மாவேந்தன்
இருதயம் - நெஞ்சம், நெஞ்சாங்குலை சக்தி - ஆற்றல்
இஷ்டம் - விருப்பம் சகலம் - எல்லாம்
ஈஸ்வரன் - இறைவன் சகஜம் - வழக்கம்
சகுனம் - குறி, புள்
சகோதரன் - உடன் பிறந்தான்