பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரியத்தால் தமிழ் கெட்டமை

47

திற்கும், மாணக்கர் வாழ்க்கைச் செலவிற்கும் போதுமானது.[1]

இங்ஙனம், தமிழ் நாட்டில், ஆரியக்கலை செழிக்கவும் தமிழ்க்கலை

"....சனியான தமிழைவிட்டுத் தைய லார்தம்
இடமிருந்தே குற்றேவல் செய்தோ மில்லை
என்னசென்மம் எடுத்துலகில் இருக்கின் றோமே"

என்று புலவர் வருந்துமாறு வறண்டது.

இங்கனம் பார்ப்பனர் உயர்தரக் கல்வியைத் தங்களுக்கே வரையறுப்பது, தங்களைப் பிறப்பிலேயே உயர்ந்தவராகவும், பிரமாவே தங்களைக் கல்விக்குரியவராகப் படைத்ததாகவும், கல்லாத் தமிழரிடம் காட்டி அவர்களை என்றும் அடிமைப் படுத்தற்கே.

ஆரியத்தால் தமிழ் கெட்டமை

தமிழ் மாது ஆரிய மொழியால் அலங்கரிக்கப் பெற்றிருப் பதாக, மஹா மஹோபாத்தியாய டாக்டர் ..வே. சாமிநாதய ரவர்கள், தங்கள் 'சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும்' என்னும் நூலிற் கூறியிருக்கிறார்கள், இது எத்துணை உண்மையென ஆராயவேண்டும்.

1; வீண் வடசொல்.

வடமொழி தமிழ் நாட்டிற்கு வந்ததிலிருந்து, தூய்மை பான தென் சொற்களுக்குப் பதிலாக, வீணான வட சொற்கள் மேன்மேலும் வழங்கி வருகின்றன; அவற்றுட் சில வருமாறு

அங்கவஸ்திரம் - மேலாடை அப்பியாசம் - பயிற்சி
அத்தியாவசியம் - இன்றியமையாமை அபராதம் - குற்றம் (தண்டம்)
அபிஷேகம் - திருமுழுக்கு
அசங்கியம் - அருவருப்பு அபிவிர்த்தி - மிகுவளர்ச்சி
அந்தரங்கம் - மறைமுகம் அபூர்வம் - அருமை
அநேக - பல அமாவாசை- காருவா

  1. History of the Nayaks of Madura, p. 257. ஒ, மொ .-4

ஒ- மொ.-4