பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

முன்னுரை

அவர் வந்தபின் ஏன் வரவரத் தாழ்த்துவரவேண்டும். ஆகை யால், அக்கொள்கை உண்மைக்கும், இயற்கைக்கும் மாறான தென்று விடுக்க:

பார்ப்பளர் மதிநுட்பமுடையவர் எனல்

பார்ப்பனர் இதுபோது மதி நுட்பமுடையவரெனல் உண்மையே. ஆனால், அது எதனால் வந்தது. ஐயாயிரம் ஆண்டுகளாகப் பார்ப்பனருக்குக் கல்வியே குலத்தொழிலாயிருத்து வருதலால், பிறப்பிலேயே அவர்க்குக் கற்குந்திறன் சிறப்ப வாய்ந்துள்ளது. குலவித்தை கல்லாமற் பாகம் படும் என்றார் முன்றுறையரையனார், "மகனறிவு, தந்தையறிவு" என்றபடி ஒரு தலைமுறையிலேயே குலக் கல்வித் திறமை பிறப்பிலமைகின்றது. அங்ஙனமாயின், 5000 ஆண்டுகட்கு அத்திறமை எவ்வளவு பெருகியிருக்கவேண்டும்? தமிழரோ, சென்ற 2000 ஆண்டுகளாக ஆரிய வரணவொழுக்கத்தால் தாழ்த்தப்பட்டு உயர்தரக் கல்வியை இழந்தவர்கள், ஆங்கிலேயர் வந்த பிறகே, ஆங்கிலத்தின் மூலமாய்க் கண்திறக்கப்பட்டுச் சென்ற இரண்டொரு நூற்றாண்டுகளாக உயர் தரக் கல்வி கற்றுவருகின்றனர். அதற்குள் எவ்வளவோ மூன்னேற்ற மடைந்துவிட்டனர். இன்னும் இரண்டொரு நூற்றாண்டுகள் தொடர்ந்து கற்பின் தமிழர் தம் முன்னோரின் நுண்ணறிலைப் பெறுவது திண்ணம். எந்தக் குலத்தையும் தலைமுறைக் கல்வியால் அறிவிற் சிறந்த தாக்கலாம். கல்வி ஒருவரின் அல்லது குலத்தாரின் பங்கன்று:

தமிழர் உயர் தரக் கல்வியிழந்ததைப் பின்வரும் குறுப்பால் அறிக

"1610-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 22 ஆம் நாள் ராபர்ட் டீ நொபிலி (Robert de Nobili) எழுதிய கடிதம் நாயக்க மன்னரின் கல்வியமைப்பைப்பற்றிச் சிறிது தெரிவிக்கின்றது, மதுரையில், 10,000 மாணவர்க்குமேல் இருக்கின்றனர், அவர்கள் பல வகுப்புக்களைச் சேர்ந்தவர்கள், ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர் தொகை 200 முதல் 300 வரையுளது. அவர்களெல்லாரும் பிராமணர்களே, ஏனென்றால், உயர் தரக் கலைகளைக் கற்சு அவர்களுக்குத் தான் உரிமையுண்டு. ....... மாணவரே தங்கள் ஊணுடைகளைத் தேடிக்கொள்வதாயிருந்தால், அவர்கள் படிப்புக் கெடுமென்று பிசுநகரும் பெரிய நாயக்கரும் சிறந்த மானியங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அவற்றின் வருவாய் ஆசிரியன்மார் சம்பளத்-