பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பார்ப்பனர் தமிழரை வென்ற வழிகள்

47

தனித் தமிழரே. பார்ப்பனர் முன் காலத்தில் ஊனுண்டமைக்கு இரு சான்றுகள் தருகின்றேன் :

(1) அகத்தியர் தென்னாட்டிற்கு வந்தபோது, வில்வலன் சுவைத்தளித்த ஆட்டிறைச்சியை உண்டார்.

(2) கபிலர் தாம் ஊனுண்டதைப் பின் வரும் புறநானூற்றுச் செய்யுளில், தாமே குறிக்கின்றார்.

"புலவு நாற்றத்த பைந்தடி
பூநாற் றத்த புகைகொளீஇ யூன்றுவை
கறிசோ றுண்டு வருந்து தொழி லல்லது
பிறிதுதொழி லறியா வாகலி னன்றும்
மெல்லிய பெரும் தாமே..........
செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே" (புறம். 14)

இது "சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் கபிலர் கைப்பற்றி, ' மெல்லியவா மால் நுங்கை' எனக் கபிலர் பாடியது.

' உப்புக்கண்டம் பறிகொடுத்த பார்ப்பாத்தி போல" என்னும் பழமொழியும் இங்கு நோக்கத் தக்கது.

இவற்றினின்றும், ஊனுண்ணாமை தமிழர் ஒழுக்காறே என்பது புலனாகும்.

ஒவ்வொரு நாட்டிலும்—அது எத்துணை நாகரிகமடைந்திருப்பினும்—நாகரிகம், அநாகரிகம் அல்லது உயர்ந்தது, தாழ்ந்தது என்னும் இரு கூறுகள் அருகருகே இருந்து கொண்டே யிருக்கும். தமிழ் நாட்டில் அங்ஙனமிருப்பவற்றுள் ஒவ்வொருவகையிலும் உயர்ந்ததையே தெரிந்து கொண்டனர் பார்ப்பனர். அதனாலேயே, அவர் எதிலும் உயர்வாகவே காணப்படுகின் றனர்.

பார்ப்பனர் தமிழரிடத்தில் நாகரிகம் பெற்றவரேயன்றித் தாம் அவர்க்குத் தந்தவரல்லர்; தமிழரிடத்தினின்றும் தாம் பெற்ற நாகரிகத்தையே ஆரியப் பூச்சுப்பூசி வேறாகக் காட்டுகின்றனர். ஆரியப் பூச்சாவது குலப்பிரிவினையும், பார்ப்பன வுயர்வும்,

தமிழர் ஆரியரிடத்தினின்று நாகரிகம் பெற்றவராயின், ஆரியர் வருமுன் தலைசிறந்த நாகரிகத்தை யடைந்திருந்து,