பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பார்ப்பனர்....தமிழ்மொழிக் கதிகாரிகளாகாமை

65

குறிக்குமேயன்றி, அதன் தாள்தொகுதியைக் குறிக்காது: புத்தகம் என்னும் பெயரே தாள் தொகுதியைக் குறிக்கும்: இது பல பார்ப்பனருக்கு விளங்குவதில்லை.

நண்டுக்குட்டி, கம்பவைக்கோல் என்பனபோன்ற மரபு வழு பார்ப்பனர்க்குள் மிகப்பொது.

(2) நாட்டுப்புறத்தாரோடு தொடர்பின்மை

ஒவ்வொரு மொழியிலும், சொற்கள் உலகவழக்கு, நூல் வழக்கு என இருபாற்படும். உலகவழக்குப் பொதுமக்கட்கும், நூல்வழக்குப் புலவர்க்கும் உரியனவாகும். பொதுமக்களிலும், நகர்ப்புறத்தாரினும் நாட்டுப்புறத்தாரே உலக வழக்கிற்குச் சிறந்தாராவர். உலகவழக்கு ஒரு மொழிக்கு உயிரும் நூல் வழக்கு அதற்கு உடம்புமாகும்.

பார்ப்பனர் தங்களை நிலத்தேவராக எண்ணிக் கொண்டு, குடியானவருடனும் தாழ்ந்தோருடனும் நெருங்கிப் பழகாமையால், தமிழ்ச்சொற்கள் பலவற்றை அறிந்திலர்.

(3) வடமொழிப்பற்றும் தமிழ்ப்பற்றின்மையும்

வீணாக வடசொற்களை வழங்குவதினாலும், மணிப்பவள நடையிலும் தற்சம நடையையே பின்பற்றுவதாலும், ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்க்காதே தமிழில் எழுதுவதாலும், ஒருகால் மொழிபெயர்ப்பினும் வடசொற்களாகவே பெயர்ப்பதாலும், தனித்தமிழை விலக்குவதாலும், தென்சொற்களை வடசொற்களென்று கூறுவதினாலும் பார்ப்ப னருக்குத் தமிழ்ப் பற்றில்லையென்பது வெட்டவெளியாம்.

“ஸ்ரீய: பதியான ஸர்வேஸ்வரனது கிருபையால் ஸம்ஸாரி சேதநர்களின் உஜ்ஜீவனத்தின் பொருட்டு,” 'யூநிவர்சிட்டி' (பல்கலைக்கழகம்), லெக்சரர் (சொற்பொழிவாளர்), கமிட்டி (குழு), ஸ்கூல் பைனல் (பள்ளியிறுதி), ஆகர்ஷண சக்தி (இழுப்பாற்றல்), நிரக்ஷரேகை (நண்கோடு), மத்தியதரை (நண்ணிலம்), தசாம்சம் (பதின்கூறு), சதவீதம் (நூற்றுமேனி), வியாசம் (விட்டம்) முதலிய வழக்குகளால், தமிழ்ப்பற்றின்மை வெளியாதல் காண்க.

(4) வடமொழியைத் தென்மொழிக்கு அளவையாகக் கொள்ளல்

தமிழ்நூல்களுக்கு வடநூல்களை மேல்வரிச் சட்டமாக வைத்துக்கொண்டு, அவற்றைத் தழுவியே பொருளுரைத்து

ஒ.மொ—5