பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

முன்னுரை

முக்கலைகளும் கெடுவதாகும். ஜெர்மனியில், ஹிட்லர் யூதரைத் துரத்துவது கொடிதே. ஆனால், அவ் யூதரைக் காப்பதற்குரிய வழிகளைத் தேடாமல், யூதரும் ஜெர்மானியரே என்று சொல்லின் எங்ஙனம் பொருந்தும்?

பார்ப்பனர் தமிழ் நூற்கன்றித் தமிழ்மொழிக் கதிகாரிகளாகாமை

இப்போதுள்ள முறைப்படி, பார்ப்பனர் தமிழ்நூல் களைக் கற்றுச் சிறந்த புலவராகலாமேயொழியத் தமிழ் மொழிக்கும் தமிழக் கருத்துகட்கும் அதிகாரிகளாக முடியாது. அதற்குக் காரணங்களாவன:

(1) ஆரிய மனப்பான்மை

ஒவ்வொரு நாட்டார்க்கும் ஒவ்வொரு மனப்பான்மையுண்டு. அதனால் சில கருத்துகள் வேறுபடும். கருத்து வெளிப்பாடே மொழி. ஒவ்வொரு மொழியின் அமைதியும், இலக்கணம் (Grammar), மரபு (Idiom) என இருவகைப்படும். ஒரு மொழியின் இலக்கணத்தையும் அதிலுள்ள நூல்களையும், எவரும் அம் மொழியை எழுதப் படிக்கத் தெரிந்தவுடன், தாமே கற்கலாம்; ஆனால், அம் மொழியின் மரபையும், அம் மொழியாரின் விதப்புக் கருத்துகளையும் தாமே அறியமுடியாது.

பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்து பல நூற்றாண்டுகளாகியும், தமிழரோடு கலவாமல், தமித்தே யிருந்துவந்தமையின், தமிழ் மரபையும் தமிழக் கருத்துகளையும் முற்றும் அறிந்தாரில்லை.

பார்ப்பனர் எப்போதும் வடநாட்டையே தங்கள் முன்னோரின் நாடாகவும், வடமொழியையே தங்கள் முன்னோரின் மொழியாகவும் கருதிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், தமி ழரோ எப்போதும் தென்னாட்டையே தங்கள் முன்னோரின் நாடாகவும், தமிழையே தங்கள் முன்னோரின் மொழியாகவும் கருதிக் கொண்டிருக்கின்றனர். இவ்வொரு வேறுபாடே இவ்விரு வகுப்பாரையும் எவ்வளவோ பிரித்துக்காட்டும்.

நூல் என்னுஞ் சொல் முதலாவது, ஒரு சூத்திரத்தாலும் பல சூத்திரத்தாலும் ஆன இலக்கணத்தையும், இலக்கணம் போன்ற கலை(Science)யையுங் குறித்ததாகும். இப்போது, அது புத்தகத்திற்கு வழங்கினும், புத்தகத்தின் பொருளைக்