பக்கம்:ஒப்பியன் மொழிநூல்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பார்ப்பனர்...தமிழ்மொழிக் கதிகாரிகளாகாமை

71

செம்பொன்பதின்பலம் என்னுந் தொடர், செம்பைக் குறிக் கும்போது, செம் என்னும் முதலசையும், பொன்னைக் குறிக்கும் போது, பதின் என்னும் இடையசையும் அழுத்தம் பெறும்.

வந்தான், வந்தாள் போன்ற சொற்கள், கூறுவார் குறிப்பின் படி பாலைச் சிறப்பாய்க் குறிக்கும்போது, தான், தாள், என்னும் ஈற்றசைகள் அழுத்தம்பெறும்.

சில சொற்களின் ஈறுகள், அழுத்தம்பெற்றுப் பொருளை வேறுபடுத்தும்.

“உப்ப கார மொன்றென மொழிப
இருவயின் நிலையும் பொருட்டா கும்மே”

என்றார் தொல்காப்பியர்.(மொழி மரபு.43).

இதன் உரையில், தபு என்னுஞ்சொல், “படுத்துக்கூற நீ சாவெனத் தன்வினையாம்; எடுத்துக்கூற நீ ஒன்றனைச் சாவப்பண்ணெனப் பிறவினையாம்” என்று நச்சினார்க்கினியர் கூறியிருத்தல் காண்க.

ஆங்கிலத்தில், முன்காலத்தில் அளபுக் குறிகள் இருந்தன; இப்போது மறைந்துவிட்டன. அதனால், அதிலுள்ள அசையழுத்தம் அழுத்தம், நெடிலோசை என இரண்டையுங் குறிப்பதாகும். சில வினைப் பகுதிகள் முதலெழுத்து நீண்டு தொழிற்பெயராவ துண்டு.

எ-டு: படு—பாடு, உண்—ஊண்.

இங்ஙனமே conduct' என்னும் ஆங்கில வினையும், con'duct என முதல் நீண்டு தொழிற்பெயராகும். ஆனால், நெடிலைக் குறிக்க ஆங்கிலத்தில் இப்போது குறியின்மையால், அசையழுத்தமே அதைக் குறிக்கின்றது. இங்ஙனமே convoy என்பது convoy' என நீண்டு தொழிற்பெயராதலுங் காண்க.

தமிழிலும், செய்யுளில் ஓசை குறைந்தவிடத்து, ஆங்கிலத்திற் போல அசையழுத்தம் குறிலை நீட்டுவதாகும்.

“ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்” என்ற செய்யுளில், கெடும் என்னும் சொல்லின் முதலெழுத்து நீண்டு, அசைச்சீருக்கு இயற்சீர்த்தன்மை யூட்டினமை காண்க.

இதை,