பக்கம்:ஒய்யாரி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ ஒய்யாசி 'பிள்ளையாரு வயித்திலே கை வய்யிடா என்ன அருமையான வாசனை இருக்கு தெரியுமான்னு தேளால் கொட்டப்பட்ட முதல் திருடன் சொல்ல, அவனைப் பின் பற்றி எல்லாத் திருடர்களும் பிள்ளையார் விக்கிரகத்தின் வயிற்றிலே கை வைத்துக் கொட்டுதல் பெற்ருலும், அடுத்தவனும் பட்டு அனுபவிக்கட்டும் என்று மெளன மாக இருக்கார்கள் என்று ஒரு கதை சொல்லுவார்களே அக்த மாதிரி......' என்று அளப்பர் ஆரம்பித்தார். 'இது வாலறுந்த கரி என்கிற கதையின் மாரீசம் தன்னைப் போல பிறத்தியாரும் வாலறுபட்டு மோசம் போகட்டுமே என்கிற கல்லெண்ணத்தோடு கரியார் வழி காட்டியது போல், இம்மூர் பிரபலஸ்தர்களும் நரித்தனம் செய்திருக்கிருர்கள். ஏமாந்தும் புத்திசாலியாக நடந்து கொண்டவன், செத்துப் போனுனே அவன் கான்' என்று ஊடுபாவு ஒட்டினர் அரைவெட்டு. "இகன் எப்பவுமே இப்படித் தான். அகம்பாவம்'இது "பஞ்சாங்க முணமுணப்பு. 'இருந்தாலும் அந்தப் பய பெரிய எம்டன் தான். பலே கோப்பன் ஸார்!’ "என்ன, லேசாகச் சொல்லிட்டிகளே! வெறும் கோப்பளு அவன் மலைக்கோப்பன்.பெரீய்ய ஆளு! இப்படியாகத் தானே வியப்புகள் உதிர்ந்து எங்கும் ஒலித்தன. மோகினி பற்றிய புதிர் விடுபட்டாலும் கூட, அவர்கள் அவளைப் பற்றிப் பேசுவதை விடமுடிய வில்லை. பேசி என்ன பயன்! ஒய்யாசியின் நடமாட்டத்தை இந்த அந்த ஊர் கொஞ்சம் சோபை பழிந்து துங்கி வழித்தது என்று தான் சொல்ல வேண்டும். (முடிந்தது.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒய்யாரி.pdf/52&oldid=762509" இலிருந்து மீள்விக்கப்பட்டது