18
நினைத்து வேதனைப்படுகிறேன்!" என்று கூறிய குடியானவன், அரசரைப் பார்த்து, "அரசே! மந்திர வித்தையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா!" என்று கேட்டான்.
"மந்திரங்களில் எனக்குச் சிறிதுகூட நம்பிக்கை கிடையாது. மந்திரம் மாயம் என்பதெல்லாம் ஏமாற்று வித்தை" என்று கூறினான் அரசன் பூவேந்தன்.
"அதுதான் தவறு. அரசே! இப்பொழுது மாய மந்திரத்தின் மூலமாகவே நான் இந்தத் திருட்டைக் கண்டுபிடிக்கப் போகிறேன். நான் கண்டுபிடிக்காவிட்டால், தாங்கள் எந்தத் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நான் கண்டுபிடித்துக் கொடுத்தால் எனக்கு என்ன பரிசு தருவீர்கள்?" என்று கேட்டான், அறிவாளன்.
"அய்யா அறிவாளரே, நீங்கள் இந்தத் திருடனைக் கண்டு பிடித்துக் கொடுத்தால் உங்களுக்கு நீங்கள் குத்தகைக்கு உழும் நிலம் அத்தனையும் சொந்தமாக்கிப் பட்டா எழுதிக் கொடுக்கிறேன்" என்றான் பூவேந்தன்.
"மிக்க நன்றி! அரசே! மிக்க நன்றி. உங்கள் அரண்மனை வேலையாட்கள் அனைவரையும் வரச் சொல்லுங்கள். எனக்கு ஓர் அறை ஒதுக்கிக் கொடுங்கள். அந்த அறையின் மத்தியில் நான் கொண்டுவந்திருக்கும் இந்த மந்திர இருப்புச் சட்டியைத் தலைகீழாக வைப்பேன். ஒவ்வொருவரும்