பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

கீழ்ச் சாதிக்காரனாய் இருந்தால் அவனுக்கு அங்கு நீதியே கிடைக்காது. சிறையும், கசையடியும், மற்ற தண்டனைகளும்தான் மிஞ்சும்.

இப்படிப்பட்ட பேய்நாகனை, அவனுடய அரச சபையில் இருந்த புலவர்கள், மனுநீதி தவறாமல் அரசாளுகிறான் என்று பாராட்டிப் பாடுவார்கள்.

இந்த மனு நீதியின் கொடுமையை அந்த அதர்வண நாட்டு மக்கள் நிறையவே அனுபவித்தார்கள்.

அரசாட்சியின் கொடுமை தாங்காமல் நாட்டை விட்டு அகதிகளாய் ஓடிப் போனவர்கள் வேறு நாடுகளில் நன்றாக வாழ்ந்தார்கள்.

சொந்த நாடு என்று அங்கேயே இருந்தவர்கள் பெருந்துன்பங்களைத் தாங்கிக் கொண்டு இருந்தார்கள்.

மக்களைக் கொள்ளையடிக்கும் அமைச்சர்களும் அதிகாரிகளும் மட்டுமே அங்கே தாய்நாட்டுப் பற்று உள்ளவர்களாய் இருந்தார்கள்.

நீதி கேட்டவர்கள் நாட்டுத் துரோகிகள் என்று பழிக்கப்பட்டார்கள்.

இப்படிப்பட்ட அதர்வண நாட்டின் மீது பக்கத்து நாடான கஞ்சபுரி அரசன் ஒரு முறை படையெடுத்து வந்தான்.