பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
30
அறிவாளி ஏழையானால்
அவன் பைத்தியக்காரன்

அதர்வண நாடு என்று ஒரு நாடு இருந்தது. அந்நாட்டைப் பேய்நாகன் என்ற அரசன் ஆண்டு வந்தான். பேய்நாகன் ஆட்சியில் நாளொரு கொலையும் பொழுதொரு கொள்ளையும் என்று துன்பங்கள் மக்களை ஆட்கொண்டன.

கொள்ளைக்காரர்களும், கொலைகாரர்களும் கட்டவிழ்த்துவிட்டது போல் ஒவ்வொரு நாளும் மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள்.

அரசாங்க அதிகாரிகளோ, நீதிமுறையில்லாமல் மக்களிடம் பணம் வசூல் செய்வதும், தர மறுப்பவர்களைச் சிறையில் அடைப்பதுமாக, கொடுமையாக நடந்து வந்தார்கள்.

நீதி கேட்டு வரும் மக்களை அரசன் நடத்திய விதமோ மிகக் கேவலமாக இருந்தது.

நீதி கேட்டு அரசனுடைய அத்தாணி மண்டபத்துக்கு வருவோரிடம் நீ என்ன சாதி என்று கேட்பான் அரசன்.

மேல் சாதிக்காரனாய் இருந்தால் அவனுக்குச் சாதகமாகத் தீர்ப்பு செய்து, தீர்ப்பு வரி என்று நிறையப் பணம் பிடுங்கிக் கொள்வான்.