பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59

தலுக்கிடையில் மண்டையோட்டில் ஓரிடத்தில் வெள்ளையான ஓரு கோடு தென்பட்டது. அது ஒரு வெட்டுக் காயம் போலவேயிருந்தது.

இதைக் கவனித்த அவள் கணவன், அந்த வெட்டுக் காயம் ஏற்பட்டது எப்படி என்று கேட்டான். அவள் சொன்னான். அதைக் கேட்டு அவன் திடுக்கிட்டான். காட்டுக்குக் குச்சிவெட்டச் சென்ற போது, தான் கத்திவீசியபோது, தலையில் அடிபட்டு வீழ்ந்த தன் தங்கை இறந்துவிட்டதாக அவன் எண்ணிக் கொண்டிருந்தான். அவள் இறக்கவில்லை. ஆனால், அவளையே தான் மனைவியாகக் கொண்டு விட்டதை எண்ணி மனங்கலங்கினான்.

அவன் ஒரு கொலைகாரனல்ல என்றால், முறை கெட்டவன்—— தன் குடும்பத்தின் நற்பெயரைக் கெடுத்தவன் என்றாகிவிட்டது.

விதி செய்த இந்தக் கொடுமையை அவனால் தாங்கமுடியவில்லை. அங்கிருந்து ஓடிவிடுவதென்று முடிவு செய்தான். தன் மனைவியும் மகனும், நன்றாக வாழ்வதற்கு வேண்டிய பொருள் வசதிகளை முதலில் அவன் செய்துவைத்தான். பிறகு பட்டுத் துணி கொள்முதல் செய்ய தூர தேசம் ஒன்றிற்குப் புறப்படுவதாகப் போக்குக் காட்டி அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான். அவன் கப்பலேறிச் சென்றதை அந்தக் குன்றின் உச்சியில் ஏறி நின்று அவன் மனைவி கவனித்துக் கொண்டு நின்றாள். அலைகடலுக்கு மேலே, சந்திரனின் பொன்னிறமான கதிர்கள் எழுப்-