பக்கம்:ஒரு ஈயின் ஆசை.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

அவன் தன் சொந்த ஊரான கான்ஹோவாப் பக்கத்தில் ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து கொண்டு குடித்தனமாக வாழ வேண்டுமென்று விரும்பினான்.

கான்ஹோவாவுக்கு அவன் வந்திருந்த போது, எளிய நிலையிலிருந்த நல்ல குணமுள்ள ஓர் அநாதைப் பெண் அவனுக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டாள். அவன் அவளைத் திருமணம் செய்து கொண்டான். முதலில் அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே நடந்து வந்தது. மணமாகி ஓராண்டானபின் அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால், அவர்களுடைய இன்ப வாழ்வு, பாவம் குறுகியதாகிவிட்டது.

ஒரு நாள் மாலையில் அழுது கொண்டிருந்த தன் பிள்ளையைத் தொட்டியிலிட்டுத் தாலாட்டித் தூங்க வைத்துவிட்டு, அந்தப் பெண் குளிக்கச் சென்றாள். ஒரு பெரிய செப்புப் பாத்திரத்தில், தண்ணீரூற்றி "மான்கெட்" என்கிற பழத்தின் தோலைப் போட்டு ஊற வைத்திருந்தாள். அந்தத் தண்ணீரில் தலை தேய்த்துக் குளித்தால், கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் கருகருவென்று அழகாகவும் இருக்கும்.

அத்தப் பழத்தோல் ஊறிய தண்ணீரைத் தலையில் ஊற்றித் தேய்ப்பதற்காக, அவள் தன் கூந்தலை அவிழ்த்து விட்டாள். அப்பொழுது அவளுடைய கூந்-