பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

98 |  ஒரு கவிஞனின் இதயம்

24.11.1962

விருத்தாசலம்

பாண்டிச்சேரி வந்தது வீணாயிற்று!

அன்பு செல்வன்,

23ம் தேதி மாலை 7 மணிக்கு நான் பாண்டிச்சேரி சேர்ந்தேன். விசாரித்ததில் பாரதிதாசன் சென்னையில் இருப்பதாகத் தெரிந்தது. வந்தும் வீணாயிற்று. சென்னைக்குச் செல்லலாமா என்று சிந்தித்துப் பார்த்தேன். ஒரு கால் அதுவும் வீணாகி விடலாம் என்ற ஐயம் கூடவே எழுந்தது. எனவே அங்கிருந்து புறப்பட்டு விருத்தாசலம் வந்து சேர்ந்தேன். எவ்விதமாயினும் 25ம் தேதி மாலை அல்லது 26ம் தேதி காலை புளியம்பட்டிக்குச் சென்று விடுவேன். நீ இந்தக் கடிதம் கண்டவுடன் அங்கு வருவது பற்றிக் கடிதம் எழுது. நளினி எனக்கு எழுதியிருந்த கடிதம் நான் புறப்படும்போதுதான் கிடைத்தது. அக்கா, குழந்தைகள் அங்கு வந்திருப்பதாக எழுதியிருந்தாள். புளியம்பட்டியில் உன் கடிதத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

உன் அப்பா

வெள்ளியங்காட்டான்