பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

97 |  வெள்ளியங்காட்டான் 

செய்வேன். ஆனால் நிரந்தரமாக இனிநான் தமிழ்நாட்டில் வாழவே மாட்டேன் என்பது மட்டும் நிச்சயம். தமிழ்நாட்டில் நேசிக்கக்கூடியது எதுவுமில்லை.

என் அன்பு மகளே நீ என்றும் எந்த நிலையிலும் ஒரு மல்லிகை மலராகவே இரு! உன்னிடத்திலிருந்து கமழ்வது நறுமணமாகவே இருக்கட்டும். பிறரைப்பற்றி நீ வருத்தப்படாதே! மற்றவர்களெல்லாம் மல்லிகையாகவே இருக்க வேண்டுமென்று ஆசைப்படாதே; எதிர்பார்க்காதே!

மனச்சோர்வு என்ற இருளுக்கு இலக்காகாதே, உற்சாகம் என்ற ஒளிவிளக்கை ஏற்று. மெளனமாக உன் கடமைகளைச் செய். ஆனந்தம் என்பது அன்பில்தான் நிறைந்திருக்கிறது. கோடீஸ்வரன் வீட்டிலும் தினசரி துக்கங்கள் இல்லாமலில்லை. ஏழையின் வீட்டிலும் சாந்தி ஒளிவீசவே செய்கிறது. அடிக்கடி எழுது.

உன் அன்புத் தந்தை

வெள்ளியங்காட்டான்.