பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

13 |  வெள்ளியங்காட்டான் 



                05.04.1957
                நவ இந்தியா


 அதிக உயர்வு தங்கள் கவிதைக்கு இருக்கிறது!  
    



அன்புடையீர்,

    தங்கள் 3ம் தேதியிட்ட கடிதம் வரப்பெற்றோம். 

' அர்சுனன் துயரம்' என்னும் கீதையின் முதல் அத்தியாயம் அதற்கு முன்னரே வந்தது. எங்கள் வசதிகள் இடமளிக்குமளவில் அதை நல்ல முறையில் எவ்வாறு பிரசுரிப்பது என யோசித்துக் கொண்டிருந்தோம். அந்நிலையில் தங்கள் கோரிக்கை கடிதம் வந்து வேதனையூட்டியது.

       அந்தக் கவிதையைப் பிரசுரம் செய்ய அதனை   ஆக்கியோர் ஒரு பத்திரிக்காலயத்தாரை வேண்டவும் வேண்டிய நிலையிலா தமிழ் இலக்கிய உலகம் இன்று இருக்கிறது? என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சிக்கு இடமே து? பத்திரிக்கையில் பிரசுரம் செய்வதைக் காட்டிலும் அதிக உயர்வு தங்கள் கவிதைக்கு இருக்கிறது. நிரந்தர இலக்கியம் என்னும் பிரிவில் அது சேருகிறது.