பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

15 |  வெள்ளியங்காட்டான் 


                 11.10.1947
                சிங்காநல்லூர்

உங்கள் சேமமே எங்கள் செல்வம்

 எனது அன்புக் குழந்தைகளே!
   நாளும், நாட்கள் சென்று கொண்டே யிருக்கின்றன. இதில், நம்முடை ஆயுளிலும் ஒவ்வொரு நாள் செல்லுவதை நாம் உணராமலில்லை. இதை நினைக்கும் போது எனக்கு ரொம்ப வருத்தம் ஏற்படுகிறது.

வானாளை வீணாக்காமல் என்ன செய்யலாமென்று நான் ஒவ்வொரு

நிமிஷமும் சிந்தித்துக் கொண்டே 

யிருக்கிறேன.துன்பப்படுகிறவர்களுக்கு எந்த விதத்தில் உதவ முடியும் என்னென்ன செய்ய முடியும் என்ற எண்ண அலைகள் என் இதயக்கடலில் மோதிக் கொண்டிருக்கின்றன.

     இவ்வாறு உந்தப்பட்டவனாகிய நான் புளியம் பட்டிக்கு வர முடியாதவனாய் வெள்ளியங்காட்டிற்குச் செல்ல நேரிட்டது. இங்கு பணம் தயாராய் இருக்கிறது. பணம் 

கைக்கு எதிர்பாராத அளவு

கிடைத்ததினால்தான் நான் வெள்ளியங்