பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

19 |  வெள்ளியங்காட்டான் 

நடந்துகொள்ள நான் அசக்தனானேன். விதி என்ற ஒரு மகாசக்தி கவி என்ற ஒரு கயிற்றை என் கழுத்தில் போட்டு இறுக்கி என்னவெல்லாமோ ஆட்டம் போடச் செய்கிறது. இந்தப் பேய்க் கூத்தில், இந்த ஊழிக்கால நர்த்தனத்தில், அருமையும் மென்மையும் வாய்ந்த

உன்னை ஒரு தக்க இடத்தில் ஒப்புவித்துவிட்டதாக நான் எண்ணிச் சற்று நிம்மதியடைந்தது உண்மை. ஆனால் வயிற்றுவலி உருவத்தில் அதையும் நான் இழப்பதா?
  ஆம்! நான் ஒரு கவிஞன். எனக்கு இந்த உலகத்தில் யாரும் நண்பர்கள் கிடையாது - அதே நிமிடத்தில் பகைவர்களும் கிடையாது. உற்றாருமில்லை, உறவினருமில்லை. எனக்கு எல்லாரும் சமம். எங்கு குணமிருந்தாலும் அதைக் கொண்டாடுவேன். எங்கு குற்றமிருந்தாலும் அதை விஷம் போல் வெறுப்பேன். யாருக்கும் அஞ்சமாட்டேன். யாருக்கும் வணங்கினதுமில்லை.
   இப்போது என்  ைன இருள் குழ்ந்து கொண்டிருக்கிறது. நான் இருப்பது மற்றவர்களுக்குப் புலப்படாமலிருக்கலாம். ஆனால், என் முன் விடிவெள்ளி ஒளிவிடுவதை நான் காணுகிறேன். அடுத்த நேரத்தில் உதயவான தரிசனத்துக்கு நான் தயாராகி விடுவேன் என்ற நம்பிக்கையும் நிறைய இருக்கிறது. 
 இந்த ஊரில் நான் இரண்டு மாதம் தங்கலாமென்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால், கிட்டத்தட்ட மூன்று மாதமும் ஆகிவிட்டது.
இனி எந்த ஊருக்குச் செல்லுவேனோ அது எனக்கே தெரியாது. ஆம்! இந்தக் கடிதம்தான் இந்த ஊரிலிருந்து எழுதும் கடைசிக் கடிதமென்று நினைக்கிறேன். நீயும் சரியான விலாசம் கொடுக்கும் வரை எனக்குக் கடிதம் எழுத வேண்டாம்.
  மாடுகள் தான் முதலில் ஈனும் அதில் வெள்ளைமாடு ஈன்றிருக்கிறதாகத் தகவல். ஆனால் இந்தத் தீனியில்லாத பஞ்சகாலத்தில் அது அடையாளம் தெரிந்து கொள்ள முடியாத அவ்வளவு கேவலமாகி விட்டதாகத் தெரிகிறது. கன்றுக்கே பால் காணாது என்று நினைக்கிறேன். நீ விரும்பினால் ஒட்டிக் கொண்டு போகலாம். என்னிடத்தில் எத்தனையிருந்தாலும்