பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

28 |  ஒரு கவிஞனின் இதயம்


   (இதுதவிர இன்னும் ஒரு சின்ன விஷயம். உனக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன். அது என் மனதில் நானாகச் செய்து கொண்ட சங்கல்பம். அதை இங்கு எழுதவே விரும்புகிறேன். ஏனெனில் ஒருக்கால் எதிர்பாராத ஒன்று - எதிர்பாராத சமயம் (புதுமைப்பித்தன் போல்) எனக்கும் வந்து (முடியவேண்டாம்) முடிந்தது என்று வைத்துக் கொள்வோமானால் அப்போது என் இந்தச் சங்கல்பம் நிறைவேறாமற் போனாலும் போகலாம்ன்றோ? அந்தக் காலத்தில் எனது சந்ததிகளில் யாரொருவரேனும் பிறந்து வந்து நிறைவேற்றக் கூடுமல்லவா? அந்தக் காரணத்தை முன்னிட்டுத்தான் இங்கு எழுதவிரும்புகிறேன்.
   அதாவது யாதெனில், இன்று நம் நாட்டில் பிச்சைக்காரர்கள் மிகவும் அதிகம், காசுப்பிச்சை, சோற்றுப்பிச்சை, துணிமணிப் பிச்சை - ஆகிய ரகங்களில் ஒன்று பத்து கோடியாகப் பெருகிக் கொண்டிருக்கிறது பிச்சைக்காரத்தனம். இதை இன்னும் பச்சையாகச் சொன்னால் பேராசை, இரக்கமற்றதன்மை, உலோபம், நன்மை தீமையறியாத பேதைத்தனமான பெரும் வியாதிக்காரர்களால் தான் இந்தப் பிச்சைக்கார இனம் இப்படிப் பெருகிக் கொண்டிருக்கிறது எனலாம். 
     நான் மேலே குறிப்பிட்டபடி, எதிர்பாராத முறையில் - எதிர்பாராத விதத்தில் (நிச்சயமாக அப்படியே இது நடந்துவிடும்) ஒரு பணக்காரனாகிவிடும் பட்சத்தில் என் வீட்டுக்கு வந்து பிச்சை கேட்கிற என் ஏழைச் சகோதர - சகோதரிகளுக்கு ஒரு பிச்சைக்காரனைப் போல, ஒன்றே  காலரிசி இரண்டரைச் சோளம் அதுவும் அளவானதுடன் எண்ணி எடுத்து மூடிக்கொண்டு வந்து போடுவது போலன்றி ஒரு கெளரவம் வாய்ந்த பணக்காரனைப்போல ஒன்றிரண்டு ரூபாய்களுக்குக் குறையாமல் கொடுத்து விடுவது என்பதுதான் அந்த சங்கல்பம்.
  நாம் இப்படிச் செய்வதைப் பார்த்து, நம்மைப் 

பின்பற்ற ஓரிரண்டு பைத்தியங்கள் இருந்தே இருக்கும். ஒரு வாரம் போல பிச்சை எடுத்தால் ஒரு ஆடோ,