பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

35 |  வெள்ளியங்காட்டான் 


                  14.10.1949
              சந்தேகவுண்டம்பாளையம்
    நீ ஆனந்த வெள்ளத்தில் மித!
        அன்புள்ள மகளே!
       உன் கடிதம் கிடைத்தது. இங்கு உன் தாயின் உடல் நிலை தேவலை, இங்குள்ள ஒரு நாட்டு வைத்தியரின் மருந்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். ஆனால் அதைக் காட்டிலும் நல்ல ஆகாரமும் காற்றும்தான் அவசியப்படுகிறது. ஆட்டுப் பாலில் காலையும், மாலையும் முட்டைகளைக் கலந்து சாப்பிடுகிறாள்.
       உன்னுடைய உடல் நிலையை கவனித்துக் கொள். உலகப் போக்கு எப்படி இருப்பினும் உன் போக்கு உயர்ந்ததாக இருக்கட்டும். குதூகலமாக இரு. நல்ல

புத்தங்களைப் படி.மன அமைதியை பெரியோர்களின் சொற்கள் நல்ல முறையில் உனக்கு உண்டாக்குகிறது என்பதில் நம்பிக்கையிருந்தால் மனமுவந்து பிரார்தனை செய். இல்லை எனில் ஏழை எளியவர்க்கு உன்னால் முடிந்த உதவியை செய்ய முற்படு