பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

36 |  ஒரு கவிஞனின் இதயம்


அத்திப் பழத்தைப் பிட்டால் பூச்சிகள் இருப்பதைப் பார்க்கிறோம். அதற்காக நாம் மனம் வருந்துவதில்லை. அதுபோலவே தான், நீ மற்றவர் நடத்தையைப் பற்றிக் கவலைப்படாதே. புருவுனே என்ற போதும் பாவ - புண்ணியம் சொந்தமில்லை - அடுத்து அவரவர் அவர்களுக்குத் தக்க பயனை அடைந்தே தீரவேண்டும். அது கிடக்க நீ அமைதியாக உன் வேலையைச் செய்து கொண்டிரு. என் ஆருயிர் குழந்தாய்! நீ உன்னை சரிவர அறிந்துகொள். உன் உடல் நிலையை சரிவர கவனித்து வா! உனக்கு தற்சமயம் வேறு யாரைப் பற்றியும் கவலை வேண்டாம். ஆம் என் மகளே! இந்த உலகம் முழுவதும் என்னுடையது. இதில் வாழும் மக்கள் அனைவரும் என் குடும் பத்தினர். எல்லாக் குழந்தைகளையும் நான் நேசிக்கிறேன். எல்லோருடைய தவறுகளையும் திருத்த முயல்கிறேன். என் துறையில் ஓயாது உழைக்கிறேன். இந்த தேசத்திற்கு என்னால் இயன்ற அளவு சேவை செய்கிறேன். இந்தச் சேவையில் கிடைக்கும் ஆறுதல் எனக்கு மகத்தானதாக இருக்கிறது. அழியாத இன்பம் தர வல்லதாக இருக்கிறது. எல்லாக் குடும்பங்களிலும் ஒரிரு சச்சரவுகள் ஏற்படுவது இயற்கையே. இதை ஏன் நாம் காயமாக எடுத்துக் கொள்ள வேண்டும்? அதிகாலையில் இன்னிசை கூட்டும் கோகுலம் போல நீ ஆனந்த வெள்ளத்தில் மித கண் மண் தெரியாமல் அறியாமை இருளில் தத்தளிக்கும் ஒவ்வொரு சீவனுக்கும், கை விளக்காக உதவு. பச்சிளம் பயிர் போன்ற தன்மையோடு வசனி. எல்லாப் புண்களையும் காலம் மாற்றிவிடும். அவ்வளவுதான் உடன் பதில் உன் அன்புள்ள அப்பா