பக்கம்:ஒரு கவிஞனின் இதயம், வெள்ளியங்காட்டான்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

41 |  வெள்ளியங்காட்டான் 



                01.06.1950
         சானடோரியம்,பெருதுறை

அவள் எப்படியும் பிழைத்துக் கொள்வாள்!

        அன்புள்ள குழந்தை வசந்தாமணிக்கு,

எல்லா நலனும் உண்டாக இறைவன் அருள் புரிவார். நான் நலம். உனது நலத்திற்கு அடிக்கடி பதில் எழுதவும் உனது கடிதம் எனது உள்ளத்தை அலைக்கழித்துவிட்டது. போனதை நெனைத்து சிந்தித்துப் பயன்யாது? மனதைத் திடப்படுத்திக் கொள். சந்தோஷமாக நீ இருப்பாயானால் அது நான் செய்த பாக்கியம். அதே போதுமானது. எல்லாம் ஆண்டவன் நம்மை நடத்திவைக்கும் போது நாம் அதன்படி நடந்து தான் ஆகவேண்டும். உனக்கு நல்ல முறையில் கணவனைத் தேடிவைத்தேன். அதுவே உனது பூர்வ புண்ணியம். அவரையே தெய்வமெனக் கருதி, நீ (வாசுகி) மாதிரி இல்லறம் நடத்த வேண்டியது. எல்லாம் தெரிந்த உனக்கு நான் என்ன எழுதப்போகிறேன். உனது தம்பியை நீ அன்பாக நடத்தினாய் என்று மனோகரன் கடிதம் எழுதியிருக்கிறான்.